Hijab

 

Twitter

இந்தியா

Hijab அணியாமல் பள்ளிக்கு செல்லமாட்டோம்" - உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் மேல் முறையீடு

அவசர வழக்காக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காத உச்ச நீதிமன்றம் ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பிறகு மனுவை பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறது.

Antony Ajay R

கர்நாடக அரசு கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததால் அந்த மாநிலத்தில் பல பிரச்சனைகள் எழுந்தன. மாணவர்கள் போராட்டத்தில் தொடங்கி கலவரங்கள் வரை நடைபெற்று முடிந்தது. நேற்று கர்நாடக உயர்நீதிமன்றம், "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதும் அல்ல" எனக் கூறி ஹிஜாப் தடை செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கர்நாடகாவில் பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். "எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்குச் செல்ல மாட்டோம்" என மானவிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

hijab protest

இந்நிலையில், கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து நடத்த உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்காத உச்ச நீதிமன்றம் ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பிறகு மனுவை பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?