Nasser  Twitter
இந்தியா

இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி: எப்போதும் முழுமரியாதையோடு உதவும் நாசர் - நெகிழ்ச்சி கதை

Gautham

ஒரு நபர் காலமான பிறகு அவருக்கு முறையாக இறுதி அஞ்சலி செய்வது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கம். ஆனால் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்கள் யார், என்ன என்கிற விவரங்கள் கிடைக்காத போது, அந்த உடல்களை அரசே பொறுப்பேற்று இறுதி அஞ்சலி செய்கிறது.

அப்படி அரசு பொறுப்பேற்று இறுதி அஞ்சலி செய்கிறது என்றால், அதை களத்தில் முன்னின்று உடல்களை மீட்டு எல்லா காரியங்களையும் செய்பவர் தான் கேரளாவைச் சேர்ந்த நாசர் பாய். இவர் அடையாளம் தெரியாத உடல்களைத் தவிர, யார் என்னவென அடையாளம் தெரிந்த உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனையின் பிணவறைக்குக் கொண்டு வருகிறார் அல்லது குடும்பங்களிடம் கொடுக்கிறார்.

Dead

உலகில் எந்த தொழிலும் மரியாதைக் குறைவான தொழில் அல்ல என்கிறார் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வென்னக்கரா நகரத்தைச் சேர்ந்த நாசர். இவர் தான் பாலக்காடு மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த இரு தசாப்த காலமாக பல உடல்களை மீட்டு வருகிறார், பல உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்.

கேரள காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் இவர், நாள் ஒன்றுக்கு சுமார் 5 - 6 உடல்களை மீட்டு, இறுதி அஞ்சலி செலுத்தி அந்த உடல்களை நல்லடக்கம் அல்லது தகனம் செய்கிறார்.

61 வயதாகும் நாசர் அவர்களுக்கு இப்படி உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவது மற்றும் மீட்பதில் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே வைத்து தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

ஒரு உடலை மீட்க என்னை அழைக்கிறார்கள் என்றால், அந்த உடலுக்கு என்னால் முடிந்த அளவுக்கு மரியாதையைக் கொடுக்கிறேன் என்கிறார் நாசர். ரயில் தண்டவாளத்தில் ஓர் உடல் சிதறிக் கிடந்தாலும் சரி, மலப்புழா அணையில் உடல் மட்கத் தொடங்கி இருந்தாலும் சரி, கிணறு, குளம், குட்டைகளில் உடல் கிடந்தாலும் சரி... அதை கொஞ்சம் கூட தயங்காமல் மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து வருகிறார்.

dead body

கிணறு, அணைகளில் ஒரு உடல் கிடந்தால், ஒரு சில நாட்களிலேயே அதிலிருந்து கொழுப்பு வெளியே வரத் தொடங்கிவிடும். அப்படி நீர் நிலைகளில் மிதக்கும் உடல்களை மீட்பது சிரமமாக இருக்கும் என்கிறார். அதே போல கிணறு போன்ற இடங்களில் கிடக்கும் உடல்களை அதிலிருந்து மேலே எடுப்பதும் மிகவும் கடினமான வேலை என்கிறார்.

1983ஆம் ஆண்டு ஒரு தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தன் வாழ்கையைத் தொடங்கினார் நாசர் பாய். ஒருகட்டத்தில் மருத்துவமனை பூட்டப்பட்ட பின், அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வைத்து பிழைத்து வந்தார். வாகனம் பழையதானது, அதைப் பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்ட போது அதை விற்றுவிட்டார்.

அதன் பிறகு தான் இறந்தவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையின் பிணவறைக்குக் கொண்டு வரும் பணியைச் செய்யத் தொடங்கினார். அப்படியே அடையாளம் தெரியாத உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி தகனம் செய்வது அல்லது நல்லடக்கம் செய்யத் தொடங்கினார்.

நகராட்சி நிர்வாகம் ஒரு உடலை நல்லடக்கம் செய்ய நாசருக்கு 2,400 ரூபாய் கொடுப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருடைய மனைவி பானு மற்றும் ஃபைசல், அஃப்சல் ஆகிய மகன்களோடு பாலக்காட்டில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். உடல்களை மீட்டு குடும்பத்திடம் கொடுப்பது அல்லது அந்த உடல்களை நல்லடக்கம் செய்து வரும் மனித நேயர் நாசர் பாய்க்கு நம் வாழ்த்துக்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?