15 வீடுகள், 159 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் மிக உயரமான கிராமம் பற்றி தெரியுமா? Twitter
இந்தியா

15 வீடுகள், 159 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் மிக உயரமான கிராமம் பற்றி தெரியுமா?

இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 159 தான். இது 2023ன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நிலவரப்படி. 2011ல் இந்த கிராமத்தில் மொத்தமே 130 பேர் தான் இருந்துள்ளனர். அடுத்த 12 ஆண்டுகளில் வெறும் 29 பேர் தான் அதிகமாகியுள்ளனர் இந்த கிராமத்தில்

Keerthanaa R

பூமி சொர்க்கத்தை சந்திக்கும் இடம் இது தான் என்கின்றனர் கோமிக் கிராமத்தை கண்டு வந்தவர்கள். கடல்மட்டத்திலிருந்து சுமார் 15,027 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது கோமிக்.

இதுவே ஆசியாவின் மிக உயரமான கிராமம், சாலை வசதிகளும் இங்கு உண்டு.

இந்தியாவின் மிக அழகிய, பெரிதும் வெளியில் அறியப்படாத கிராமங்களில் ஒன்றாக இருக்கிறது இந்த கோமிக் கிராமம். இமாச்சல பிரதேசத்தின் ஸ்பிடி பள்ளத்தாக்கு அருகே அமைந்துள்ளது இந்த கிராமம். காசா என்ற நகரத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

பனி போர்த்திய மலைகளும், பெரிய பெரிய பள்ளத்தாக்குகளும் நாம் பார்ப்பதற்கு கண்கவர் காட்சியளிக்கிறது.

இந்த கோமிக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் மென்மையான குணமுடையவர்களாம்.

இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 159 தான். இது 2023ன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நிலவரப்படி. 2011ல் இந்த கிராமத்தில் மொத்தமே 130 பேர் தான் இருந்துள்ளனர். அடுத்த 12 ஆண்டுகளில் வெறும் 29 பேர் தான் அதிகமாகியுள்ளனர் இந்த கிராமத்தில்.

இந்த ஊரில் 15 வீடுகளே உள்ளன. இங்கு அமைந்துள்ள லண்டுப் டிசெமோ கோம்பா புத்த மடாலயம் தான் இந்த கிராமத்தின் அடையாளமே.

இந்த மடாலயத்தின் தலைவராக கருதப்படும் மைத்ரேய புத்தா, இங்குள்ள மக்களின் வழிகாட்டியாக, பாதுகாவலராக பார்க்கப்ப்டுகிறார். இந்த மடாலயத்திலுள்ள கோட்டை சாய்ந்த மணல் சுவர்களால் ஆனது. இவற்றில் புனித நூல்கள், அழகிய கலை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

லண்டுப் டிசெமோ கோம்பா புத்த மடாலயம் 500 ஆண்டுகள் பழமையானது. இந்த மடாலயத்திற்குள் பெண்களுக்கு அனுமதியில்லை, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜைகள், பிரார்த்தனைகள் நடக்கும்.

கிராமத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த மடாலயத்திற்கு நடந்து செல்வது சவாலான ஒன்று. கிராமம் அமைந்திருக்கும் உயரம் காரணமாக ஆக்சிஜன் கிடைப்பதும் கடினம், மற்றும் குளிர்காற்று அடிக்கும்.

சம்மர் சீசன் என்றாலும், 7 முதல் 9 டிகிரி வரை இருக்கும் இந்த இடத்தின் டெம்பரேச்சர்.

இந்த கோமிக் கிராமத்தின் பல்வேறு பாரம்பரிய விழாக்களில் ஒன்று புத்த பிச்சுக்களின் சம் நடனம்.

ஆசியாவின் மிக உயர்ந்த கிராமமான கோமிக்கிற்கு நிறைய பைக் சாகசகாரர்கள் வருகின்றனர். குறிப்பாக இந்த மடாலயத்திற்கு. ஆனால் நாம் சாதரணாமாக இந்த கிராமத்திற்கு செல்வது சற்றே சிரமம் தான்.

இங்கு செல்ல காசா டவுனில் இருந்து பஸ் வசதிகள் அவ்வளவாக இல்லை. அதனால் தனியாக கால் டாக்ஸி, அல்லது நம் தனிப்பட்ட வாகனத்திலோ தான் செல்ல வேண்டும். அப்படியும் தனியே இங்கு வாகனம் ஓட்டுவது ஆபத்தே.

தவிர இந்த கிராமத்தினர் அதிகம் வெளியில் வரமாட்டார்கள். செவ்வாய், சனிக் கிழமைகளில் மதியம் 2 மணிக்கு ஒரு அரசு பேருந்து இருக்கிறது. இந்த ஊருக்கு செல்ல 90 நிமிடங்கள் ஆகிறது.

பனிப்பொழிவு காலங்களில் வெளியில் செல்வது கடினமாக இருக்கும் என்பதால் தங்களுக்கு தேவையான பொருகளை முன்பே சேகரித்து வைத்துக்கொள்கின்றனர். பனிப்பொழிவு சமயத்தில் வீட்டிற்குள் அடைப்பட்டு இருக்கும் இவர்கள், ஸுவெட்டர்கள் பின்னுவது ஓவியங்கள் வரைவது போன்றவற்றை செய்கின்றனர்.

இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் ஆடு மாடுகள், குதிரைகள் மேய்ப்பவர்களாக இருக்கின்றனர். கிராமத்தின் ஆரம்பத்தில் சிறிய வீடுகளும், கொஞ்சம் தூரம் இடைவெளிகளில் சற்றே பெரிய வீடுகளும் அமைந்துள்ளன.

இந்த கிராமத்திற்கு சுற்றுலா சென்றால், தங்கும் வசதிகளும், செலவுகளும் குறைவே. ஒரே ஒரு அறை, அங்கு நாம் படுத்து உறங்க ஒரு பாயும், குளிரிலிருந்து தப்பிக்க ஒரு கெட்டியான போர்வையுமே அளிக்கப்படுகிறது.

மூன்று வேளை ருசியான உணவுகள், மதிய நேரத்தில் குளிரை தணிக்க இதமாக சூடாக தேநீர் கிடைக்கும். மே மாத மத்தியிலிருந்து, செப்டம்பர் மாதம் வரை கோமிக் கிராமத்தை விசிட் செய்வது சிறந்த தருணமாக இருக்கும்

ஆனால், சம்மரில் தான் செல்கிறீர்கள் என்றாலும், கம்பளி, சுவெட்டர்களை மறந்துவிட வேண்டாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?