Kulfi Village: How a Town in Bengal Has Turned into Hub of 'Sweetness' Twitter
இந்தியா

இந்தியாவின் குல்ஃபி கிராமம் எது தெரியுமா? எப்படி இந்த பெயர் வந்தது?

ஒவ்வொரு நாளும், விடியற்காலையில் இருந்து மதியம் வரை, குல்ஃபி கிராமத்தின் இளைஞர்கள் 120-130 சுவையான குல்ஃபி ஐஸ்கிரீம்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Priyadharshini R

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் படைப்பாற்றலுக்காக பிரபலமடைந்துள்ளது.

ஒரு காலத்தில் டோஹாலியா தஸ்பரா என்று அழைக்கப்பட்ட இந்த கிராமம் குல்ஃபி கிராமம் என்ற புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளது.

கண்டி பிளாக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், தவிர்க்க முடியாத குல்ஃபி ஐஸ்கிரீமை தயாரிக்கும் கலையில் தேர்ச்சி பெற்ற 25 குடும்பங்கள் வசிக்கின்றன.

ஒவ்வொரு நாளும், விடியற்காலையில் இருந்து மதியம் வரை, குல்ஃபி கிராமத்தின் இளைஞர்கள் 120-130 சுவையான குல்ஃபி ஐஸ்கிரீம்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குல்ஃபி தவிர்க்கமுடியாத சுவைக்கு பெயர் பெற்றதாக மாறிவிட்டது.

கொளுத்தும் கோடை வெப்பத்திற்கு இதமாக இந்த குல்ஃபி ஐஸ்கிரீம் கிராமவாசிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் சுவையை வழங்குகிறது.

கிராமத்தைச் சேர்ந்த அனுபவமிக்க குல்பி விற்பனையாளர் சுரேன் தாஸ் கூறுகையில்,

“ஒவ்வொரு குல்ஃபி விற்பனையாளரும் தினமும் எழுநூறு ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள். இதன் விளைவாக, இந்த கிராமம் குல்ஃபி கிராமம் என்று அறியப்படுகிறது.

கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில், குல்பியின் வருகைக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குல்ஃபி என்று சொல்லும் போது புன்னகையுடன் அதனை மக்கள் வாங்கி சுவைக்கிறார்கள்.” என்றார்.

எப்படி தயாரிக்கப்படுகிறது?

குல்ஃபி ஐஸ்கிரீமை உருவாக்க, முதலில் ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் பால் கொதிக்க வைக்கப்படுகிறது. ஏலக்காய் தூள் சேர்க்கப்படுகிறது, பின்னர் மிதமான தீயில் மெதுவாக கிளறப்படுகிறது. பின்னர் பால் முழுவதுமாக கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கப்படுகிறது.

பின்னர், சர்க்கரை, பாதாம் மற்றும் பிஸ்தா ஆகியவை சேர்க்கப்படுகிறது. இறுதியாக, தயாரிக்கப்பட்ட கலவையானது பல்வேறு குல்ஃபி அச்சுகளில் ஊற்றப்படுகிறது. குளிர வைக்கப்பட்ட பிறகு விற்பனைக்கு தயாராகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?