Langza : Spiti's incredible fossil village is an unexplored gem in the Himalayas
Langza : Spiti's incredible fossil village is an unexplored gem in the Himalayas Twitter
இந்தியா

கடலுக்கு அடியில் மூழ்கிய இந்திய கிராமம் - சுற்றுலா பயணிகளை கவர என்ன காரணம்?

Priyadharshini R

லாங்சா என்பது ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கிராமம்.

இந்த பிரமிக்க வைக்கும் இமயமலை கிராமம் கடல் விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதைபடிவங்களால் நிறைந்தது என்பது பலருக்கு தெரியாது.

இந்த கண்கவர் கிராமத்தைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

லாங்சா எங்கே அமைந்துள்ளது?

இளவரசி மலை என்றும் அழைக்கப்படும் சாவ் சாவ் காங் நில்டா மலையின் அடிவாரத்தில் லாங்சா என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது.

4400 மீ உயரத்தில் அமைந்துள்ள லாங்சா, சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் கடலுக்கு அடியில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, லாங்சா எண்ணற்ற காரணங்களுக்காக பயணிகளிடையே பிரபலமடைந்து வருகிறது.

ஸ்பிட்டியில் உள்ள ​​லாங்சாவை சுற்றி நீங்கள் பயணம் செய்தால், சில அற்புதமான, மற்றும் மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் புதைபடிவங்களை காணமுடியும் அவை பெரிய பெரிய பாறைகளின் கீழ் புதைந்துள்ளன.

இது போன்ற புதைபடிவங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சௌடுவா மையத்தில் (Chaudua Centre ) அறிந்துக்கொள்ளலாம்.

இங்கு 250 முதல் 199 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ட்ரயாசிக் காலத்தின் பவளப்பாறைகள் மற்றும் 199 மற்றும் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்மோனாய்டுகளைக் (கடல் நத்தை போன்று இருக்கும்) காணலாம்.

இந்த பழமையான புதைபடிவங்களின் மதிப்பை புரிந்து கொண்ட பலர், இந்த துண்டுகளை சேகரித்து சுற்றுலாப் பயணிகளுக்கு மலிவான விலையில் விற்கத் தொடங்கினர்.

இதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடல் படிமங்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்தது.

புவியியலாளர்கள் இந்த புதைபடிவங்கள் வலிமைமிக்க இமயமலையை விட மிகவும் பழமையானவை என்று நம்புகிறார்கள், மேலும் இந்த நம்பமுடியாத புதைபடிவங்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.

அதோடு கிராமத்தின் அருகே மலையின் நடுவில் பெரிய புத்தர் சிலையும் ஒரு கோவிலும் அமைந்துள்ளது. இமய மலை பின்னணியில் இந்த இடத்தை காண்பது கண்களுக்கு விருந்தாக அமையும்.

நீங்களும் இந்த இடத்தை சென்று பார்க்க விரும்பினால் ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுவதற்கான நேரம் இது.

ஸ்பிட்டி தலைமையகமான காசாவிலிருந்து லாங்சாவை எளிதாக அடையலாம். மக்கள் மலையேற்றம் செய்ய தகுந்த இடமாகும் இது உள்ளது!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?