Lok Sabha Election Results 2024 LIVE Twitter
இந்தியா

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் Live: மத்தியில் ஆட்சியை கைப்பற்ற போவது யார்?

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரம் இதோ

Priyadharshini R

நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளது

தமிழ்நாட்டில் காலை 08.05 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 07 இடங்களில் முன்னணியில் உள்ளது

காலை 08.10 மணி நிலவரப்படி 44 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை

தமிழ்நாட்டில் காலை 8.10 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 14 இடங்களில் முன்னணியில் உள்ளது

மத்திய சென்னை, மதுரை, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை

கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை

இந்தியா கூட்டணி 108 தொகுதிகளிலும், பாஜக 85 தொகுதிகளிலும் முன்னிலை

காலை 08.25 மணி நிலவரப்படி திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ முன்னிலை

காலை 08.30 மணி நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை

காலை 8.30 மணி நிலவரப்படி மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் பின்னடைவு

காலை 8.40 மணி நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி முன்னிலை

ராகுல் காந்தி போட்டியிட்ட கேரளாவின் வயநாடு, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் முன்னிலை

நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் முன்னிலை

சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 3000 வாக்குகள் பெற்று முன்னிலை

திருச்சி தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் துரை வைகோ 799 வாக்குகள் பெற்று முன்னிலை

விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பின்னடைவு. காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை

வாரணாசியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த பிரதமர் மோடி, தற்போது 13638 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்

காலை 10.20 மணி நிலவரம் - தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை

இந்தியா கூட்டணி - 25 தொகுதிகள்

பாஜக கூட்டணி - 21 தொகுதிகள்

AIMIM கட்சி - 1

சுயேட்சை - 1

காலை 10.30 மணி நிலவரம் - பாஜக கூட்டணி முன்னிலை

தமிழகத்தில் முன்னிலை நிலவரம்

திமுக - 36

அதிமுக - 03

பாஜக - 01

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024

மொத்தம் தொகுதிகள் - 543

காங்கிரஸ் - 223 தொகுதிகள்

பாஜக - 290 தொகுதிகள்

பிற - 30 தொகுதிகள்

காலை 11.30 மணி நிலவரம் - பாஜக முன்னிலை

காங்கிரஸ் - 228 தொகுதிகள்

பாஜக - 294 தொகுதிகள்

விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தியானம்

தென் சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் 27,029 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு

நடிகர் சுரேஷ் கோபி வெற்றி

கேரளாவின் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி

கேரளாவின் முதல் பாஜக எம்பியாக சுரேஷ் கோபி வெற்றி

ஆந்திராவின் நகரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர்.சி கட்சியின் வேட்பாளர் ரோஜா 19,000 வாக்குகள் பின்னடைவில் இருக்கிறார்

இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் கங்கனா ரனாவத் வெற்றி

பிற்பகல் 2 மணி நிலவரம் - பாஜக முன்னிலை

மொத்தம் தொகுதிகள் - 543

காங்கிரஸ் - 228 தொகுதிகள்

பாஜக - 297 தொகுதிகள்

பிற - 18

பிற்பகல் 3.15 மணி நிலவரம் - பாஜக முன்னிலை

வாரணாசி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார் மோடி!

கோவையில் தோல்வியை தழுவிய அண்ணாமலை!

வெற்றி முகத்தில் திமுக - மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து!

தமிழ்நாட்டில் 40/40 இடங்களில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி!

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா தோல்வி

மாலை 4.50 மணி நிலவரம் - பாஜக முன்னிலை

காங்கிரஸ் - 232 பாஜக - 294

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?