அனுமன் கோவில் டிவிட்டர்
இந்தியா

ஆஞ்சநேயருக்கே நோட்டீஸ் அனுப்பிய இந்தியன் ரயில்வே - ஓஹோ இது தான் காரணமா?

Keerthanaa R

ரயில் நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலை அகற்றக்கோரி ஆஞ்சநேயருக்கே நோட்டீஸ் அனுப்பியுள்ளது இந்தியன் ரயில்வே.

ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் என்ற நகரில் உள்ள ரயில் நிலையத்தில் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 10 நாட்களுக்குள் கோவிலை அகற்றக் கோரி ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

நகரின் மேற்கு அணைக்கு அருகில் அமைந்துள்ள கோயிலின் சுவரில் இந்த அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. ஹனுமானுடைய பெயருக்கு நேரடியாக முகவரியிடப்பட்ட அந்த அறிவிப்பில், "ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை நீங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளீர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது சட்டப்படி குற்றம் எனவும், பத்து நாட்களில் இடத்தை காலி செய்ய வேண்டும் எனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் காலி செய்யாவிட்டால், உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை முக்கிய அறிவிப்பாக கருதும்படி அந்த நோட்டீஸில் கொடுக்கப்பட்டுள்ளது

கோவிலுக்கு அருகேயுள்ள காதிக் பாஸ்தி என்ற இடத்தில் சுமார் 60 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்களுடன் சேர்த்து அனுமான் கோவிலும் ஆக்கிரமிப்பு கட்டடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே குழு அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளையும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்று கூறி காலி செய்ய ஒரு அறிவிப்பை ஒட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள், ரயில்வேவின் நோட்டீஸுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?