Cordelia Ship  Twitter
இந்தியா

சொகுசு கப்பலுக்கு புதுச்சேரியில் அனுமதி மறுப்பு - காரணம் என்ன?

புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவது அரசின் எண்ணம். அதே நேரத்தில் வருமானத்திற்காக, கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலான சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழிசை கூறியிருந்தார்.

Priyadharshini R

தமிழக அரசு தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ள சொகுசு சுற்றுலா கப்பலுக்கு புதுச்சேரியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தை கடந்த 5ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Cordelia Ship

cordelia நிறுவனத்தைச் சேர்ந்த இந்த சொகுசு கப்பல் 700 அடி நீளம், 11 தளங்கள், 796 அறைகளுடன் பல்வேறு வசதிகளைக் கொண்டது. 2, 3, 5 நாட்கள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கட்டணங்களைப் பொறுத்தவரைத் தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்யும் எனவும், ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

இந்த சொகுசு கப்பல் நேற்று காலை 8 மணி அளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி நோக்கிச் சென்றது. ஆனால் அந்த சொகுசு கப்பலுக்குப் புதுச்சேரி அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. புதுச்சேரி அரசின் அனுமதியின்றி வந்ததையடுத்து சொகுசு கப்பலை கடலோர காவல்படை திருப்பி அனுப்பியது.

Tamilisai Soundararajan

முன்னதாக இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் சொகுசு கப்பலுக்கு, புதுச்சேரி அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை.

"அது தொடர்பான எந்த கோப்பும் எனக்கு வரவில்லை. சொகுசு கப்பல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை" என்றார் அவர்.

புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவது அரசின் எண்ணம். அதே நேரத்தில் வருமானத்திற்காக, கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலான சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழிசை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?