Pune Family Twitter
இந்தியா

பெண் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சி; ஹெலிகாப்டரில் அழைத்துவந்த தந்தை

பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த விஷால்.போசாரியில் இருந்து ஷெல்ஹாவோனில் உள்ள தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரில் குழந்தையையும், மனைவியையும் தந்தை விஷால் ஜரேகர் அழைத்து வந்தார்.

Antony Ajay R

பெண்குழந்தைகள் பிறப்பதை துரதிஷ்டமாகக் கருதிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இதற்குச் சாட்சியாக தனக்குப் பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக ஹெலிகாப்டரில் அழைத்து வந்து அசத்தினார் குழந்தையின் தந்தை விஷால் ஜரேகர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் பகுதியைச் சேர்ந்தவர் விஷால் ஜரேகர். இவரின் குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண்குழந்தைகளே இல்லாமல் இருந்தது. வக்கீலாக பணியாற்றிவரும் ஜரேகரின் மனைவிக்குக் கடந்த ஜனவரி 22-ம் தேதி குழந்தை ஒன்று பிறந்தது. பெண்குழந்தை பிறந்திருப்பதை அறிந்த விஷால் மற்றும் அவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பிரசவத்திற்காக விஷால் ஜரேகரின் மனைவி, போசாரி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த விஷால்.போசாரியில் இருந்து ஷெல்ஹாவோனில் உள்ள தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரில் குழந்தையையும், மனைவியையும் தந்தை விஷால் ஜரேகர் அழைத்து வந்தார்.

விஷால் ஜரேகரின் இந்த செயலை நேரில் பார்த்தவர்கள் வியப்படைந்தனர். இவர்களைப் பற்றிய பேச்சு நாடு முழுவதும் பரவியிருக்கிறது. மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத் தான் அவர்களை பாதுகாக்க மட்டுமில்லாமல் கொண்டாடவும் தெரிகிறது!

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?