பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் அதை சமாளிக்க வித விதமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்துக்கொண்டிருக்கின்றன டீசல் விலையும் கணிசமாக உயர்ந்து வருகின்றது.இதனால் பொது மக்கள் வாழ்வியல் வெகுவாக பாதித்து வருகின்றது.
பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க மக்கள் பல வகையில் கையாண்டுக் கொண்டிருக்கையில் மஹாராஷ்டிரா இளைஞர் ஒருவர் காலத்தில் பின் நோக்கி சென்று குதிரையில் அலுவலகம் செல்லத் தொடங்கி விட்டார்.
ஷேக் யூசுப்
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் ஷேக் யூசுப். பெட்ரோல், டீசல் விலையைச் சமாளிக்க இவர், குதிரை ஒன்றை வாங்கி, அதில் தனது ஆபீஸுக்கு சென்று வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது பைக் வேலை செய்யவில்லை என்பதாலும் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் அதைச் சமாளிக்கக் குதிரையை வாங்கியதாக ஷேக் யூசுப் தெரிவித்தார். இந்த குதிரையை வாங்க ரூ 40 ஆயிரம் செலவானதாகவும் இப்போது அலுவலகத்திற்குக் குதிரை மூலமே சென்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவர் தினமும் குதிரையில் சென்று வருவதை பொது மக்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.அந்த வீடியோ தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.