"ஐஸ்வர்யா ராய் போல அழகிய கண்கள் வேணுமா? மீன் சாப்பிடுங்க! " பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு ட்விட்டர்
இந்தியா

"ஐஸ்வர்யா ராய் போல அழகிய கண்கள் வேணுமா? மீன் சாப்பிடுங்க!" பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

அவர் மங்களூருவில் கடற்கரையோரம் வாழ்ந்து வந்தார். அப்போது தினமும் மீன் சாப்பிடுவார். அவரது கண்களை கவனித்ததுண்டா? மீன் சாப்பிடுவதால், உங்களுக்கும் அவரை போல அழகிய ஒளிரும் கண்கள் கிடைக்கும்" என்று குறிப்பிட்டார் அமைச்சர்.

Keerthanaa R

மீன் சாப்பிட்டால் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கண்களை போல் உங்கள் கண்களும் அழகாக இருக்கும் என்று பேசியிருக்கிறார் பாஜக அமைச்சர் விஜயகுமார் காவித். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பழங்குடியின நலத்துறை அமைச்சர் விஜயகுமார் காவித். நந்துர்பர் என்ற இடத்தில் மீனவர் நலசங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார் காவித்.

நிகழ்ச்சியில் பேசியவர், "தினமும் மீன் சாப்பிடுபவர்களின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும் மேலும், கண்கள் ஒளிரும். நான் உங்களிடம் ஐஸ்வர்யா ராய் பற்றி சொல்லியிருக்கிறேனா?

அவர் மங்களூருவில் கடற்கரையோரம் வாழ்ந்து வந்தார். அப்போது தினமும் மீன் சாப்பிடுவார். அவரது கண்களை கவனித்ததுண்டா? மீன் சாப்பிடுவதால், உங்களுக்கும் அவரை போல அழகிய ஒளிரும் கண்கள் கிடைக்கும்" என்று குறிப்பிட்டார் அமைச்சர்.

மீனில் ஒரு விதமான எண்ணெய் இருப்பதாகவும், அது உங்கள் கண்களுக்கு நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. மற்றொரு பாஜக அமைச்சரான நிதிஷ் ரானே, "நானும் தான் தினமும் மீன் சாப்பிடுகிறேன். என் கண்கள் ஒளிரவில்லையே?

நான் காவித்திடம் இது பற்றி ஏதாவது ஆராய்ச்சிகள் இருக்கிறதா என்பதை விசாரிக்கிறேன்" என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அமோல் மிட்காரி," இதுபோன்ற அற்பத்தனமான கருத்துகளை பேசுவதற்கு பதில், பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் சிர்ஷாத், பிரியங்கா சதுர்வேதியின் அழகை பார்த்து தான் ஆதித்யா தாக்கரே அவரை மாநிலங்களவைக்கு அனுப்பிவைத்தார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?