ஸ்பைஸ்ஜெட் விமானம் விபத்து Twitter
இந்தியா

மும்பை - மேற்கு வங்கம் : ஸ்பைஸ்ஜெட் விமானம் விபத்து - 40 பேர் காயம்

காயமடைந்த பயணிகள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

Priyadharshini R

மும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் துர்காபூர் விமான நிலையத்தில் தரையிறடங்கும் போது விபத்து ஏற்பட்டது.

விமானம் தரையிறங்கும்போது பெரிய அளவில் குலுங்கியுள்ளது. எனினும் விமானி அதனைக் கட்டுப்படுத்தி விமானத்தைச் சீராக நிறுத்தினார்.

இருந்தபோதிலும் பயணிகளின் தலைக்கு மேலே வைத்திருந்த பைகள் அவர்கள் மீது விழுந்துள்ளன. சிலர் விமானத்திற்குள்ளாகவே கீழே விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 40 பேர் காயம் அடைந்தனர்.

Spicejet flight

இந்த சம்பவத்தில் காயமடைந்த பயணிகள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர். பயணிகள் பெரிய ஆபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்திருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?