Lottery Ticket Pexels
இந்தியா

கடனால் சொந்த வீட்டை விற்கவிருந்த நபருக்கு அடித்த ஜாக்பாட் - கடவுள் இருக்கான் குமாரு!

NewsSense Editorial Team

கடனின்றி அமையாது உலகு. திருமணம், காது குத்து, சீர் வரிசை, மருத்துவமனைச் செலவுகள்... என பல விஷயங்களுக்கு இன்று கடன் இல்லை என்றால் ஒரு நடுத்தர சாமானிய குடும்பத்தால் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு செலவினங்கள் அதிகரித்துவிட்டன. மறுபக்கம் வாங்கும் சம்பளம் இ எம் ஐ செலுத்தியே கரைந்துவிடுகிறது. சேமிப்புப் பழக்கம் மெல்ல குறைந்து வருகிறது.

இப்படி நீங்கள் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் போது, பெரும்பாலும் நீங்கள் அடமானம் வைத்த சொத்தை விற்று நிதி நிறுவனங்கள் பணத்தை வசூலித்துக் கொள்ளும். ஒருவேளை நீங்கள் தனி நபர்களிடம் வாங்கி இருந்தால் சொத்துக்களை விற்று பணத்தைக் கொடுக்குமாறு சொல்வர் அல்லது சொத்தை எடுத்துக் கொண்டு செல்வர்.

இதுபோல ஒரு இக்கட்டான சூழலில் நீங்கள் வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டி சேர்த்து ஒருவர் பணம் கொடுத்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு அதிர்ஷ்டம் ஒருவருக்கு நடந்திருக்கிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மொஹம்மத் (பாவா என்றும் இவரைச் செல்லமாக அழைக்கிறார்கள்) ஒரு பெயின்டர். கர்நாடகா கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மஞ்சேஸ்வரத்தைச் சேர்ந்த இவருக்குத் தான் சமீபத்தில் கேரள மாநில லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது.

எல்லா தகப்பன்களும் எதிர்கொள்வதைப் போல, மொஹம்மத் பாவாவும் தன் குடும்பம் குழந்தை குட்டிகளுக்கு கடன் வாங்கி செலவழித்திருக்கிறார்.

மகளின் திருமணம், வீட்டுப் பணிகளை நிறைவு செய்ய, மகன் நிசாமுதீனை கத்தார் நாட்டுக்குச் அனுப்பி வைக்க... என அவர் வாங்கிய கடன் தொகை வட்டி எல்லாம் சேர்ந்து 50 லட்சம் ரூபாயைத் தொட்டுவிட்டது. மொஹம்மத் பாவாவால் கடனை சரியாகச் செலுத்த முடியவில்லை.

கடன் கொடுத்த வங்கிகள், நிதி நிறுவனங்கள், உறவினர்கள் கடனைக் கேட்டு நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர். எனவே கையில் இருக்கும் ஒரே சொத்தான சுமார் 2,000 சதுர அடி வீட்டை விற்று கடனைத் திருப்பிச் செலுத்தவிடலாம் என முடிவு செய்தார்.

இதற்கிடையில் ஹொசங்காடியில் உள்ள அம்மா லாட்டரி ஏஜென்சியில் ஒரு கோடி ரூபாய் பரிசுக்கான லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி இருந்தார்.

மறுபக்கம் மொஹம்மத் தரகர் வழி வீட்டை வாங்க விரும்புவோருக்கு வீட்டை எல்லாம் சுற்றிக் காட்டி கிட்டத்தட்ட விலை எல்லாம் கூட பேசி முடித்துவிட்டார்கள். வீட்டை விற்பதற்கான அட்வான்ஸ் தொகையை வாங்க வேண்டியது தான் பாக்கி.

கடந்த திங்கட்கிழமை, கச்சிதமாக அட்வான்ஸ் வாங்குவதற்கு கொஞ்ச நேரம் முன், மொஹம்மத் பாவாவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாகச் செய்தி வந்தது. அரசின் வரிப் பிடித்தம் எல்லாம் போக மனிதருக்கு 63 லட்சம் ரூபாய் கையில் கிடைக்கும்.
லாட்டரி கிடைத்த மகிழ்ச்சியில், வீட்டை விற்பதில்லை என முடிவு செய்திருக்கிறார்.

லாட்டரி பணம் கையில் வந்த பின் 50 லட்சம் ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டு, மீதமுள்ள பணத்தில் மொஹம்மத் பாவா மகிழ்ச்சியாக தன் வாழ்கையை நடத்திக் கொள்ளவிருக்கிறார். அதிர்ஷ்ட தேவதையின் அருள் பெற்ற மொஹம்மத் பாவா சேட்டனுக்கு நம் வாழ்த்துக்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?