Monica Khanna Twitter
இந்தியா

மோனிகா கன்னா : தீ பிடித்த விமானம், 185 பேரை காப்பாற்றிய பைலட் - திக்திக் நிமிடங்கள்

இன்ஜின் தீ பிடித்து எரிவதைப் பார்த்து, சூழலை உணர்ந்து கொண்டனர். மற்றொரு இன்ஜின் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்து கொண்டனர். விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விவரத்தைத் தெரியப்படுத்தினார் மோனிகா கன்னா.

Gautham

கடவுள் மனித உருவத்தில் வந்து உதவுவார் என ஆத்திகவாதிகள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். சிலருக்கு தங்களின் வாழ்கையிலேயே கூட நடந்திருக்கும். இன்னும் சிலர் தங்கள் உற்றார் உறவினர்களின் வாழ்வில் அப்படி ஒரு மனிதர் திடீரென வந்து உதவியதாகக் கூறி பெருமிதப்படுவதைக் கேட்டிருப்போம்.

அப்படி மோனிகா கன்னா என்பவர், தன் சமயோசிதமான அறிவினாலும் நீண்ட நெடிய அனுபவத்தாலும், சுமார் 185 பேரின் உயிரைக் காப்பாற்றி இந்திய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.

நேற்று ஜூன் 19ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் ஒன்று பீகார் தலைநகரமான பாட்னாவிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டது. பீகார் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தின் இடது பக்க இன்ஜின் தீ பிடித்து எரியத் தொடங்கியது.

Spicejet flight

விமானத்தின் காக்பிட் என்றிழைக்கப்படும் இயக்கப் பகுதியில் பொறுப்பில் இருந்தவர் கேப்டன் மோனிகா கன்னா. அவருக்கு உதவியாளராக முதன்மை விமான அதிகாரியாக (First Officer) பல்ப்ரீத் சிங் பாதியா இருந்தார். இருவரும் இன்ஜின் தீ பிடித்து எரிவதைப் பார்த்து, சூழலை உணர்ந்து கொண்டனர்.

மற்றொரு இன்ஜின் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்து கொண்டனர். இடது பக்க இன்ஜினை முழுமையாக அனைத்துவிட்டு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விவரத்தைத் தெரியப்படுத்தினார் மோனிகா கன்னா. அதோடு பாட்னா விமான நிலையத்தில் அவசரமாகத் தரை இறங்குவதற்கான அனுமதியையும் பெற்றார்.

அவசரமாக விமானத்தைத் தரை இறக்குவதற்கு முன், விமானத்தை ஒரு சுற்று பறக்கச் செய்ய வேண்டியது அவசியம். அதை எல்லாம் கடந்து 185 பயணிகளுக்கும் எந்த வித பாதிப்புமின்றி இரு பெண் விமானிகளும், விமானத்தைப் பாதுகாப்பாக தரை இறக்கினார். விமானம் நிலையாகத் தரை இறங்கிய பின், பயணிகள் அனைவரும் அதிவேகமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பயணிகள் அனைவரும் மீட்கப்பட்ட பின், மோனிகா கன்னாவுக்கு பாட்னா விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சார்பாக கரகோஷத்தோடு பாராட்டி வரவேற்பு கொடுக்கப்பட்டது.

விமானத்தின் இன்ஜினில் பறவை சிக்கிக் கொண்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாகப் பொறியாளர்கள் கூறுகின்றனர். இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் சிவில் விமான சேவை இயக்குநரகம் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Monica Khanna

மோனிகா கன்னா அதிக அனுபவம் கொண்ட ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானி என சில செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேப்டன் மோனிகா கன்னா மற்றும் விமானத்தின் முதன்மை அதிகாரி பல்ப்ரீத் சிங் பாதியா விமானத்தின் இன்ஜின் தீ பிடித்த போதும், விவேகத்தோடு செயல்பட்டு விமானத்தையும், பயணிகளையும் பாதுகாப்பாக தரையிறக்கினர். இந்த அனுபவமிக்க பைலட்களின் தீரச் செயலை எண்ணி நாங்கள் பெருமிதப்படுகிறோம் என ஸ்பைஸ் ஜெட் நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?