Mir Jafar : ஆங்கிலேயர்களிடம் இந்தியாவை விற்ற நபர் - துரோகத்தின் வரலாறு Twitter
இந்தியா

Mir Jafar: ஆங்கிலேயர்களிடம் இந்தியாவை விற்ற நபர் - துரோகத்தின் வரலாறு

துரோகத்தின் அடையாளமாக எட்டப்பனை தமிழ்மக்கள் குறிப்பிடுவது போல, மிர் ஜாஃபர் முன்னிறுத்தப்படுவது ஏன்? 200 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சிக்கு இவர்தான் காரணமா?

Antony Ajay R

250 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் துரோகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறார் மிர் ஜாஃபர்.

அரசியல் மேடைகளில் துரோகி என்பதை குறிப்பிட "இவர் மிர் ஜாஃபரைப் போன்றவர்" என்கின்றனர்.

வரலாற்றின் பெரும்பாலான இடங்களில் தனி மனிதனின் முடிவுகள் கோடிக்கணக்கான மக்களின் விதியைத் தீர்மானிப்பதாக இருந்ததைப் பார்க்கிறோம்.

துரோகத்தின் அடையாளமாக எட்டப்பனை தமிழ்மக்கள் குறிப்பிடுவது போல, மிர் ஜாஃபர் முன்னிறுத்தப்படுவது ஏன்? 200 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சிக்கு இவர்தான் காரணமா?

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பேனி

இன்றைய வாங்காள தேசம் அன்றைக்கு வலுவில்லாத முகலாய பேரரசின் கடைசி அரசாங்கமாக எஞ்சியிருந்தது.

17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைமுறை தலைமுறையாக அரசுக்கு சேவை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் சையத் மிர் முஹம்மது ஜாஃபர்.

அவரது தாத்தா ஈரானின் சஃபாவிட் பேரரசில் இருந்து இடம் பெயர்ந்து டெல்லிக்கு வந்ததாகவும், முகலாய பேரரசர் ஔரங்கசீப் அரசில் பதவி வகித்ததாகவும் விக்கிபீடியா தளம் குறிப்பிடுகிறது.

மோசமான தலைமை மற்றும் பக்கத்து நாடுகளின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் மேலும் பலவீனமான பேரரசாக நொந்துகொண்டிருந்தது முகலாய பேரரசு.

அந்த நேரத்தில் அரசாட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை ஐரோப்பிய வியாபாரிகளிடம் பெருகியது. முக்கியமாக பிரிட்டிஷார்.

Mir Jafar

மறுபக்கம் அரியணையின் மேஜர் ஜெனரலாக பதவிவகித்தார் மிர் ஜாஃபர். அரசியலில் குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் இவருக்கு அரியணையின் மீதுதான் பெரும் ஆசை இருந்தது.

அரியணையைக் கைப்பற்றுவது குறித்த சிந்தனையில் மிர் ஜாஃபர் ஆழ்ந்திருந்தார். சதி செய்ய வழிகளைத் தேடினார்.

ஆங்கிலேயர்கள் மற்றும் பிரஞ்சுக்காரர்கள் இடையே யாருடைய ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்துவது என்பதில் பெரும் போட்டியிருந்தது.

1756வாக்கில் பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் இடையே போர் வெடித்தது. இந்தியாவில் உள்ள இருநாட்டு அமைப்புகளும் சண்டையில் ஈடுபட்டன.

அப்போது வங்காள நவாப் சிராஜ் உத்-தௌலா பிரான்ஸுடன் கூட்டணி வைக்க முடிவு செய்திருந்தார்.

பிளாசி போர்

கிழக்கிந்திய கம்பேனி அப்போது கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு வியாபாரம் செய்து வந்தது.

கொல்கத்தா முந்தைய நவாபால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அங்கு அவர்கள் பெரிய வியாபார நகரத்தையும், பாதுகாப்பு கோட்டைப் போன்ற அமைப்பையும் உருவாக்கியிருந்தனர்.

நவாப் சிராஜ் உத்-தௌலா கிழந்திய கம்பேனி அதிகாரிகளிடம் வர்த்தகத்தை குறைக்குமாறு ஆணையிட்டார். ஆனால் அவர்கள் மறுத்தனர்.

British war

எனவே கொல்கத்தாவை கைப்பற்ற முடிவு செய்தார்.

அப்போது கிழக்கிந்திய கம்பேனியின் லேப்டினன்ட் கர்னலாக இருந்தவர் ராபர்ட் க்ளிவ்.

பிளாசி கிராமத்தில் சிராஜ் தாக்குதல் தொடுத்த போது, ராபட் கிளைவிடம் 3000 வீரர்கள் இருந்தனர். ஆனால் நவாபின் படையிலோ 50000 பேர்.

ராபர்ட் கிளைவ், மிர் ஜாஃபர் மற்றும் பிற சதிகாரர்களுடன் முன்னதாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

விளைவாக நவாப் சிராஜ் நம்பிய படைகள் அவருடன் இல்லை. பிரிட்டிஷ் படைகள் அவரது அரசை வீழ்த்தின.

தப்பியோடிய சிராஜை தேடிக் கண்டடைந்து மரண தண்டனைக் கொடுத்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.

சுதந்திர வங்காளத்தின் முடிவு

உடனடியாக நவாப் பதவியில் அமரவைக்கப்பட்டு அழகுபார்கப்பட்டார் மிர் ஜாஃபர்.

ஆனால் கிழக்கிந்திய கம்பெனியில் இருந்து அவருக்கு கிடைக்க வேண்டிய எந்த சலுகையும் கிடைக்கவில்லை.

நவாபை விட கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகள் சக்திவாய்ந்தவர்களாக உருவெடுத்தனர்.

ராபர்ட் கிளைவ் பெரும் கோடீஸ்வரராக உயர்ந்தார்.

மிர் ஜாஃபருக்கு இராணுவ உதவிகளை சில காலத்துக்கு ஆங்கிலேயே அரசு வழங்கி வந்தாலும் கிழக்கிந்திய கம்பெனியின் கோரிக்கைகளை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

Robert Clive

இரண்டு ஆண்டுகள் இவ்வாறு கடந்தன. பின்னர் மிர் ஜாஃபர் டச்சு அரசுடன் ஒப்பந்தம் ஏற்படுர்த்தியிருப்பதை ராபர்ட் கிளைவ் கண்டறிந்தார்.

டச்சு போர்கப்பல் ஹூக்லி நதியில் நுழைந்தன. இதற்கு தண்டனையாக நவாப் பதவியை பறித்த கிளைவ், மிர் ஜாஃபரின் மறுமகனான மிர் காசிம் என்பவரை நவாப் ஆக்கியது.

காசிம் பிரிட்டிஷ் எதிர்பார்ப்புக்கு மாறாக மிகவும் சுதந்திரமான மனப்போக்குடன் இருந்தார்.

ஜாஃபரோ மீண்டும் நவாப் பதவியை அடைய ஆங்கிலேயர்களிடன் நற்பெயரை பெற முயன்று கொண்டிருந்தார்.

மூன்று ஆண்டுகள் கழித்து 1763 இல் மீண்டும் மிர் ஜாஃபர் நவாப் ஆக அரியணை ஏறினார். ஆனால் அவர் ஆட்சி செய்யவில்லை. ஆங்கிலேயர்களுக்கு வேண்டிய சலுகைகளை செய்துகொண்டிருந்தார்.

விளைவாக அவரது பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு முழுவதுமாக சரிந்தது.

இதுவே ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சியை அமைக்கவும் வழிவகுத்தது.

British India

பிரிட்டிஷ் இந்தியா உருவானது

1600களில் இந்தியாவில் கடையை விரித்த கிழக்கு இந்திய கம்பேனி, கொல்கத்தா போன்ற நகரங்களில் அதிக குடியேற்றங்களை ஏற்படுத்தியது.

மிர் ஜாஃபர், ராபட் கிளைவிடம் நவாப் சிராஜை தோற்க வைத்தது கிளைவின் மிகப் பெரிய திட்டத்தின் சிறிய பகுதியே.

வங்காளத்தை கைக்குள் வைத்துக்கொண்டதால் அதிக பணமும் வளங்களும் ஆங்கிலேயர்கள் கைக்கு சென்றது.

அதனைக்கொண்டு ஏகாதிபத்திய பேரரசை இன்னும் விரிவுபடுத்தத் தொடங்கினர்.

மிர் ஜாஃபர் முகலாயப் பேரரசை முடிவுக்கு கொண்டு வந்ததால் ஆங்கிலேயர்களை பின்பற்றும் கூட்டமும் உருவானது. ஆங்கிலேயர்களின் ஆட்சி முதன்முதலாக அப்போதுதான் இந்தியாவில் தோன்றியது.

ஒரு தனிமனிதனின் பதவி ஆசை, நேர்மையின்மை இல்லாவிட்டால் இன்று நம் நாட்டின் வரலாறு வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கலாம்.

மிர் ஜாஃபரின் தற்போதைய வழித்தோன்றலான ரெசா அலி மிர்சா

வரலாற்றை மற்றுங்கள்

துரோகத்தை குறிப்பிடும் மற்றொரு சொல்லாக பயன்பட்டு வரும் மிர் ஜாஃபர் துரோகியா? இல்லையா என்பதில் மற்றொரு கருத்தும் நிலவுகிறது.

மிர் ஜாஃபரின் தற்போதைய வழித்தோன்றலான ரெசா அலி மிர்சா முஷிதாபாத் என்ற நகரத்தில் பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார்.

இவர் இவரது புத்தகத்தில் மிர் ஜஃபாரி ஒரு துரோகி இல்லை என எழுதியிருக்கிறார். அதாவது, நவாப் சிராஜ் முன்னதாகவே மிர் ஜாஃபரை வேலையைவிட்டுத் துரத்தியதாகவும், அவரிடம் இருந்து பிரிந்து சென்ற பின்னரே மிர் ஜாஃபர் பிரிட்டிஷாருடன் இணைந்ததாகவும் மிர்சா கூறுகியிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?