பெர்னார்ட் மரக் twitter
இந்தியா

பாலியல் தொழில் நடத்திய மேகாலயா பாஜக தலைவர்? பாக்கெட் கணக்கில் ஆணுறை - யார் இவர்?

NewsSense Editorial Team

பாரம்பரியத்தைக் காப்போம், கலாச்சாரத்தைப் பாதுகாப்போம்... போன்ற முழக்கங்களை முன்வைக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலத் துணைத் தலைவர் ஒருவர், தன் பண்ணை வீட்டில் பாலியல் தொழில் நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேகாலயா மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் பெர்னார்ட் என் மரக் என்பவருக்குச் சொந்தமாக மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் ஒரு பெரிய கட்டடம் இருக்கிறது.

அங்கிருந்து 75 பேர் மீட்கப்பட்டனர். ஐந்து குழந்தைகள் உட்பட ஒரு மைனர் பெண்ணும் இருந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பெர்னார்ட் மரக் அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தியதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

இதை மேற்கு கரா ஹில்ஸ் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி விவேகானந்தா சிங் ரத்தோர் இந்துஸ்தான டைம்ஸ் பத்திரிகையிடம் உறுதி செய்துள்ளார். பெர்னார்ட் மரக்கின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அவ்வீட்டின் அமைப்பு ஆகியவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பெர்னார்ட் மற்றும் அவரது உடனிருப்பவர்கள் அவ்வீட்டை பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது என கூறியுள்ளார் விவேகானந்த சிங்

இதனைத் தொடர்ந்து அவர் கடந்த சனிக்கிழமை முதல் காவல்துறையின் கையில் சிக்காமல் தப்பித்து தலைமறைவாக ஓடி வந்தார். சமீபத்தில் மேகாலயா மாநிலத்தின் துராவில் உள்ள நீதிமன்றம் பெர்னார்ட் மரக்குக்கு எதிராக ஜாமீன் பெற முடியாத கைது வாரன்டைப் பிறப்பித்தது.

இது போக மேகாலயா காவல்துறையும் பெர்னார்ட் மரக்குக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸ் வழங்கி இருந்தனர். உத்தரப் பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையின் போது காவல்துறையிடம் பிடிபட்டார் 46 வயதான மரக்.

பெர்னார்ட் மரக்குக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என பாஜக தரப்பு கூறியுள்ளது. மேகாலயா மாநிலத் தலைவர் எர்ன்ஸ்ட் மவ்ரி (Ernest Mawrie) பெர்னார்ட் மரக் மீது பொய் வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

மூன்று மாடி கட்டடத்தில் கீழ்தளம் நிகழ்ச்சிகளை நடத்தவும் முதல் தளத்தில் உள்ள 30 அறைகள் குடியிருப்புவாசிகள் வசிக்கவும், இரண்டாம் தளத்தில் ஆதரவற்றோர் தங்கும் விடுதியும் செயல்பட்டு வந்ததாக பாஜக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்திலிருந்தே அந்த விடுதியில் சிறார்கள் உள்பட இளைஞர்கள் தங்கி வந்ததாகவும் அவர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவு அளித்து வந்தவர் பெர்னார்ட் மரக் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மரக் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆளும் அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் மாநில பாஜக தலைவர் எர்னெஸ்ட் மாவ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார்.

மேகாலயா மாநில முதல்வர் கான்ரட் சங்க்மாவோ இது காவல்துறை விவகாரம், இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. காவல்துறை சேகரித்திருக்கும் ஆதாரங்களை வைத்து, சட்டத்துக்கு உட்பட்டு வழக்கு முன்னெடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

மேலும், பெர்னார்ட் மீதான நடவடிக்கைகள் அரசியல் ரீதியிலான பழிவாங்கல்கள் என்கிற பாரதிய ஜனதா கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கான்ரட் சங்க்மா இந்த விவகாரத்தில் அரசியல் எதுவும் இல்லை என்றும், இவ்விவகாரத்தில் சட்டப்படி எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை உறுதி செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?