பாலியல் வன்கொடுமைகளுக்கு தண்டனைகள் கடுமையாக இருக்கவேண்டும் என்ற பலரின் கருத்தை ஒப்புவது போல ஒரு சம்பவம் ஜார்க்கண்டில் நடந்துள்ளது.
தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் தான் என்று நம்பி, சிறுமியை வீட்டில் விட்டுவிடுமாறு ஒரு குடும்பத்தினர் அனுப்பிவைக்க, அவ்விருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அவர்கள் இருவரையும் எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்லா என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பக்கத்து கிராமத்தில் ஒரு திருமண விழா ஒன்றிற்கு சென்றனர். திருமணம் முடித்துவிட்டு திரும்பும் நேரத்தில் பேருந்துகள் எதுவும் சிறுமியின் குடும்பத்திற்குக் கிடைக்கவில்லை.
சிறிது நேரம் காத்திருந்த பிறகு அவ்வழியாக அவர்கள் கிராமத்தைச் சேர்ந்த இருவர்இரு சக்கர வாகனத்தில் வந்ததை பார்த்து, சிறுமியை மட்டும் வீட்டில் விடுமாறு கூறி அனுப்பிவைத்துள்ளனர்.
ஆனால் செல்லும் வழியில் சிறுமியை இருவரும் சேர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர். பயந்துபோன சிறுமி தனது குடும்பத்தார் வீட்டிற்கு வந்ததும் நடந்ததை கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த குடும்பத்தினர், அவ்விருவரையும் தேடி பிடித்து சரமாரியாக அடித்துத் தாக்கினர். ஆத்திரம் அடங்காததால், இருவர் மீதும் மண்ணென்ணை ஊற்றி எரித்துவிட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இன்னொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust