தெலுங்கானா : 62 வயதில் முதல் விமானப்பயணம் மேற்கொண்ட விவசாய பெண்மணி - வைரல் வீடியோ
தெலுங்கானா : 62 வயதில் முதல் விமானப்பயணம் மேற்கொண்ட விவசாய பெண்மணி - வைரல் வீடியோ Twitter
இந்தியா

தெலுங்கானா : 62 வயதில் முதல் விமானப்பயணம் மேற்கொண்ட விவசாய பெண்மணி - வைரல் வீடியோ

Antony Ajay R

மில்குரி கங்கவ்வா என்ற தெலுங்கானாவைச் சேர்ந்த் விவசாயி பெண்மணியின் முதல் விமானப்பயணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை இல்லாத மனிதர் மிகக் குறைவு தான். யாருமே தங்களது முதல் விமானப் பயணத்தை மறக்க முடியாது என்பது உண்மை.

கங்கவ்வா 62 வயதில் தனது முதல் விமானப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். சாதாரண விவசாயியான இவருக்கு யூடியூப் மூலமாக இது சாத்தியமாகியிருக்கிறது.

மை வில்லேஜ் ஷோ என்ற யூடிப் சேனல் மூலம் பிரபலமடைந்தார் கங்கவ்வா. அவரது முதல் விமானப்பயணத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

போர்டிங் பாஸ் பெறுவது, சோதனை, விமானத்துக்குள் நுழைவது, சீட் பெல்ட் அணிய சிரமப்பட்டது என அனைத்தையுமே அவரது உணர்ச்சிகளுடன் வீடியோவில் பதிவு செய்துள்ளார் கங்கவ்வா.

கங்கவ்வா விமானத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து மிரண்டதாக கூறியுள்ளார்.

இந்த வீடியோ கிட்டத்தட்ட 6 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 5.4 லைக்குகள் கிடைத்திருக்கின்றன.

வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களால் கங்கவ்வா பேசும் தெலுங்கை புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அவரது உணர்ச்சிகளை புரிந்துகொண்டு கமண்ட் செய்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வளர்ப்பு நாய்க்கு ₹2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?