ஆந்திராவின் புதிய மாவட்டங்களில் ஒன்றிற்கு அம்பேத்கரின் பெயரிடப்பட்டதால் கலவரம் வெடித்துள்ளது. இதில், அமைச்சர் ஒருவரின் வீட்டிற்குக் கலவரம் நடத்தியவர்கள் தீ வைத்துள்ளனர்.
ஆந்திரா மாநிலத்திலிருந்த 13 மாவட்டங்களை மேலும் பிரித்து, இன்னும் 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மறுசீரமைப்பை அதிகாரப்பூர்வமாகக் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மறைந்த முதலமைச்சர் என் டி ஆர், சுதந்திர போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜு போன்ற பெருந்தலைவர்களின் பெயரைச் சூட்ட அரசு முடிவு செய்தது.
இந்த வகையில், கொனாசீமா என்ற மாவட்டத்திற்கு சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பெயரை சூட்ட அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதை பல தரப்பினரும் ஆதரித்த நேரத்தில், மற்றும் பல தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு கோனசீமா பரிக்ரக்ஷன சமிதி, கோனசீமா சாதனா சமிதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். "கோனசீமா தான் வேண்டும், வேறு பெயர் வேண்டாம்" என்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கலவரத்தில் அமலாபுரத்தில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் பினிபே விஸ்வரூப்பின் வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பொன்னடா வெங்கட சதீஷ் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. அமைச்சர் விஸ்வரூப்பின் கமனகரு வீட்டின் முன்பு கூடிய போராட்டக்காரர்கள், கற்களை வீசியெறிந்து வீட்டின் கதவு, ஜன்னல்கள், வீட்டினுள் இருந்த பொருட்களைச் சேதப்படுத்தினர். அமைச்சரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்த போலீஸார், கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தினர்.
ராஜமுந்திரி, காக்கிநாடா மற்றும் அண்டை மாவட்டங்களான மேற்கு கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களிலிருந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் படைகள் அமலாபுரத்திற்கு அனுப்பப்படுவதாக எலுரு சரக துணை காவல்துறைத் தலைவர் ஜி.பால ராஜு தெரிவித்தார்.
கலவரத்தில் ஒரு அரசு பேருந்து மற்றும் ஒரு கல்லூரி பேருந்திற்கு தீ வைக்கப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust