Mirza Ghalib Newssensetn
இந்தியா

Mirza Ghalib எனும் பெருங்கவிஞன்: வரலாற்றை பதிவு செய்த டெல்லியின் காதலன் - வரலாற்று பகிர்வு

NewsSense Editorial Team

கலைஞர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தை தங்கள் கண் கொண்டு பார்த்த விஷயங்களை படைப்பாக மாற்றி அடுத்த தலைமுறைக்குக் கடத்துபவர்கள். அப்படி முகலாயர்களின் அரசவையில் அதிகாரபூர்வமாக வரலாற்றை பதிவு செய்த உருதுக் கவிஞர், கலைஞர் மிர்சா கலிப்.

மிர்சா அசாதுல்லா பெய்க் கான் (Mirza Asadullah Baig Khan) என்று சொன்னால் ஒருவேளை நமக்கு அவரைப் பற்றித் தெரியாமல் போகலாம். ஆனால், கவிஞர் கலிப் என்றால் எங்கேயோ படித்த ஒரு பெயராக நமக்கு பொறிதட்டலாம்.

டெல்லி மீதான காதல்:

1797ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பிறந்த இந்த உருதுக் கவிஞரின் சொந்த ஊர் சமர்கண்ட் (இன்றைய உஸ்பெகிஸ்தான்). இவருடைய தாத்தா தான் சமர்கண்டில் இருந்து அஹ்மத் ஷாவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் குடியேறினார்.

பாரசீகம், உருது என இருமொழியிலும் கவிதைப் புனையும் ஆற்றல் பெற்ற கலிப் அவர்கள், இன்றளவிலும் உருது கவி எழுதும் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.

கவிஞர் கலிப் ஒரு டெல்லி காதலர். "டெல்லி என்றால் என்னவென்று என் ஆன்மாவிடம் கேட்டேன், இந்த உலகம் தான் உடல், டெல்லி அதன் ஆன்மா" என கவிதை எழுதியுள்ளார் என்றால், டெல்லி நகரத்துக்கும் இவருக்குமான பந்தத்தை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

11 வயதில் கவிதை புனையத் தொடங்கிய இவர்,13 வயதில் நவாப் இலாஹி பக்‌ஷின் மகள் உம்ராவ் பேகத்தை மணந்து கொண்டு டெல்லியில் செட்டிலானவர்.

தன் கவிதைப் புனையும் திறமையாலும், மொழி ஆளுமையாலும் 1850களில் இரண்டாம் பஹதூர் ஷா சஃபரின் அரசவையில் இடம் பிடித்தார். அவர் தான் கவிஞர் கலிப்புக்கு தபிர் உல் முல்க் (Dabir-ul-Mulk) & நஜ்ம் உத் தெளலா (Najm-ud-Daula) பட்டத்தைக் கொடுத்தவர்.

சொல்லப் போனால், இரண்டாம் பகதூர் ஷாவுக்கே பாடம் எடுக்கும் அளவுக்கு சிறந்து விளங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பிறகு அவருடைய மகன் ஃபக்ர் உத்தின் மிர்சாவுக்கும் ஆசிரியராக இருந்தவர். இதே காலகட்டத்தில் தான் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஆஸ்தான வரலாற்று ஆசிரியராகவும் இருந்தார். முகலாயர்களின் வீழ்ச்சியை வலியோடு பதிவு செய்யப்பட்டிருந்த பல குறிப்புகள் இவருடையது தான்.

முகலாயர்கள் காலத்தில், கடிதப் போக்குவரத்து தான் முக்கிய தகவல் பரிமாற்றக்களமாக இருந்தது. அப்போது கடிதம் எழுதுவது என்பது ஒரு கலையாகப் பார்க்கப்பட்டது.

அக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார் கவிஞர் கலிப். கடினமாக எழுதப்பட்டு வந்த கடிதங்களை, எளிமைப்படுத்தி உரையாடல் நடையில் எழுதியவர் கலிப் என சில வலைதளங்கள் சொல்கின்றன.

மிர்சா கலிப் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் தான் மொஹம்மத் இப்ராஹிம் சக் (Mohammad Ibrahim Zauq), மோமின் (Momin) ஆகிய கலைஞர்களும் வாழ்ந்து வந்தனர்.

உலகப் புகழ்பெற்ற உருது இலக்கிய ஆளுமை அல்தாஃப் ஹுசைன் ஹலி (Altaf Hussain Hali) மிர்சா கலிப்பின் மாணவர்களில் ஒருவர்.

Yaadgaar-e-Ghalib என்கிற மிர்சா கலிப்பின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் இதே அல்தாஃப் ஹுசைன் ஹலி என்கிற மெளலானா குவாஜா ஹலி தான்.

1869ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி மிர்சா கலிப் காலமான பிறகு , அவருடைய உடல் ஹஸ்ரத் நிசாமுதீன் ஆலியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முகலாயர்களின் வீழ்ச்சிக் காலத்தில் இவர் அரசவையில் இருந்ததால், மிர்சா கலிப்பின் வாழ்க்கையில் செல்வச் செழிப்பு நிறைந்ததாக இல்லை.

பல தருணங்களில் நண்பர்களின் உதவியில் குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து வந்தார் கலிப்.

கடைசியில் முகலாய சாம்ராஜ்ஜியம் சரிந்த பிறகு, அவருக்கு ஓய்வூதியம் கூட சரியாகக் கிடைக்கவில்லை என்கிறது இந்துஸ்தான் டைம்ஸ் வலைதளம்.

உன்னத உருது மொழிக் கவிஞர் மிர்சா கலிப்பை நினைவுகூர்வோம், அவர் கவிதைகளை வாசித்து மகிழ்வோம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?