Modi: பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி காலமானார் - உலக தலைவர்கள் இரங்கல் ட்விட்டர்
இந்தியா

Modi: "ஒரு மகத்தான நூற்றாண்டு இறையவனை அடைந்தது" பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்

Keerthanaa R

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக அகமதாபாத்தின் UN மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் டிசம்பர் 30 அன்று காலை காலமானார். இவருக்கு வயது 100.

தனது தாயாரின் மரணம் குறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டு, தனது துக்கத்தை பகிர்ந்திருந்தார்

தன் ட்வீட்டில், "ஒரு மகத்தான நூற்றாண்டு இறைவனின் காலடியை அடைந்தது" என்று மோடி பதிவிட்டிருந்தார். ஹீராபென் மெஹ்சானா மாவட்டம் ஹிஸ்நகரில் பிறந்தார். இளம் வயதிலேயே ஹீராபென் தன் தாயை இழந்தவர்.

கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி தன் தாயாரின் 100வது பிறந்தநாளுக்கு அவரை சந்தித்திருந்தார். அப்போது அவர் தன்னிடம் கூறியதை எப்போதும் மறக்கமாட்டேன் என, மற்றொரு ட்வீட்டில் மோடி தெரிவித்திருந்தார்.

"நீ ஆற்றும் பணியை யோசித்து செய். அதேபோல உன் வாழ்க்கையை சுத்தமாக வாழ்" என்று ஹீராபென் கூறியதாக ட்வீட்டில் அவர் பகிர்ந்திருந்தார்

ஹவுரா, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் வந்தே பாரத் ரயிலை தொடக்கிவைக்கவிருந்தார் மோடி. ஹீராபென் காலமானதை அடுத்து, தற்போது அகமதாபத்திற்கு புறப்பட்டார்.

நேற்று மாலை மருத்துவர்கள் ஹீராபென்னின் உடல் நிலை தேறி வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் கூறியிருந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார்.

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு உலக தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?