இந்தியா vs மேற்கிந்தியதீவுகள்

 

Twitter

இந்தியா

Morning News Wrap : டி 20-ல் இந்தியா அபார வெற்றி, ஹிஜாப் விவகாரம், தடுப்பூசி எதிர்ப்பு

Antony Ajay R

முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டி, மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா தலைமையில் நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் டி20 போட்டி தொடங்கியது. பனிப்பொழிவு காரணமாக முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி இரண்டு ஸ்பின்னர்களுடன் களம் இறங்கியது.


முதல் விக்கெட்டை எளிதில் எடுத்த போதிலும் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மேயஸ் மற்றும் பூரான் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். 50 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இருந்த மேற்கிந்திய தீவுகள் 90 ரன்களுக்கு 5 விக்கெட் என சரிந்தது. இந்திய அணியின் ஸ்பின்நெர்கள் சிறப்பாக பந்து வீசி அடுத்தடுத்து விக்கெட்களை எடுத்தனர். கடைசியில் பொறுப்புடன் விளையாடி கேப்டன் பொல்லார்ட் அவுட் ஆகாமல் 24 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்தது.

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் ஓப்பனிங் சிறப்பாக அமைந்தது. கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குடித்தார். 19 பந்தில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உட்பட 40 ரன்கள் அடித்து வெளியேறினார். மறுபுறம் இஷான் கிஷன் நிதானமாக ஆடி 42 பந்தில் 35 ரன்கள் அடித்தார். கோலி மற்றும் பந்த் அடுத்தடுத்து வெளியேற கடைசியில் சூரியகுமார் யாதவ் 18 பந்தில் 34 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 18.5 ஓவரில் 162 ரன்கள் அடித்து முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி பிப்ரவரி 18ம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Hijab

ஹிஜாப் அணியாத மாணவிகள் மீண்டும் தடுத்து நிறுத்தம்

கர்நாடகாவில் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளை நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் ஹிஜாப் அணியும் பிரச்னை உடுப்பியில்தான் முதன் முதலில் வெடித்தது. இந்த போராட்டத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் பரவியது. ஹிஜாப் விவகாரத்தில் தொடர்ந்த பதற்றமான சூழல் ஏற்பட்டதன் காரணமாக கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டது. இப்பிரச்னை தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் உடைகளை அணிந்து பள்ளிக்கு வர மாணவர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டன.

வடக்கு கர்நாடகாவின் விஜயபுராவில் உள்ள அரசு கல்லூரி ஒன்றுக்கு இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். அப்போது, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்க கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. இதற்கு முன்பாக இதே கல்லூரிகளுக்குள் ஹிஜாப் அணிந்த மாணவிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உச்சநீதிமன்றம்

"வாரிசுகள் அர்ச்சகர் ஆவதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை"

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என உத்தரவிட்ட தமிழக அரசு, அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விதிகளை வகுத்திருந்தது. இந்த விதிகளை எதிர்த்தும், அர்ச்சகர் பள்ளிகள் நடத்துவதை எதிர்த்தும், அர்ச்சகர் தேர்வுக்காக வெளியிடப்பட்ட விளம்பரங்களை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன. வழக்கில் இன்று வாதங்கள் துவங்கப்பட்டன.


அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வொரு ஆகமம் உள்ளதாகவும், அர்ச்சகர்களை நியமிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டார். ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அர்ச்சகர்கள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள்? பரம்பரை பரம்பரையாக நியமிக்கப்படுகிறார்களா? எனக் கேள்வி எழுப்பினர்.


அதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், குருகுல பயிற்சி பெற்றவர்கள் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் தெரிவித்தார்.


பரம்பரை பரம்பரையாக, வாரிசுகளை அர்ச்சகர்களாக நியமிப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், பின் வழக்கில் வாதத்தின் தொடர்ச்சிக்காக விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

புத்தக கண்காட்சி

45-வது மாபெரும் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான ‘பபாசி’ சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் தொடங்கி வைத்தார்.

இந்த புத்தக காட்சி மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களுக்கு, இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு, 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த மாதம் தொடங்கப்பட இருந்த புத்தக காட்சி, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று தொடங்கியுள்ளது.

இந்நிலையில், புத்தக்காட்சி விழா மேடையில் பேசிய முதலமைச்சர், சென்னை, மதுரை, கோவை போல தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பபாசி புத்தக்காட்சியை நடத்த வேண்டும் அதற்கான உதவிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என்று கூறினார்.

மேலும், திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம் என்றும், திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தின் பெயரே அண்ணா அறிவாலயம் என்றும் கூறிய அவர், ஆண்டாண்டுகளாக அடிமைபடுத்தப்பட்டிருந்த தமிழ் சமூகத்திற்கு புத்தகங்கள் மூலம் அறிவை வளர்த்தது திராவி இயக்கம் என்று பெருமிதம் தெரிவித்தார்.

கனட பிரதமர்

தடுப்பூசிக்கு எதிர்ப்பு, "பிரதமர் பதவி விலக வேண்டும்" - கனட மக்கள் போராட்டம்

கட்டாய கரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் காரணமாக, கனடாவில் அவசரநிலை பிரகட னம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி ஓட்டுநர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த மாதம் 29-ம் தேதி லாரிகளுடன் தலைநகர் ஒட்டாவாவில் குவிந்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டதால் ஜஸ்டின் ட்ரூடோ அங்கிருந்து வெளியேறி ரகசிய இடத்தில் தஞ்சமடைந்தார். போராட்டம் தொடர்வதால் நேற்று முன்தினம் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அடுத்த 30 நாட்களுக்கு இது அமலில் இருக்கும்என்று பிரதமர் ட்ரூடோ தெரி வித்தார்.

இதன்மூலம் போராட்டக்காரர்களை சிறையில் அடைக்கவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும் போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவசரநிலையை பிரகடனப்படுத்தியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உச்சபட்சமாகக் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மத்திய அரசின் 3 புதிய வேளாண்சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அதற்கு ஆதரவாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது சொந்த நாட்டில் பிரச்சினை ஏற்பட்டபோது அவர் ரகசிய இடத்துக்கு சென்றார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?