தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆளுநராக இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன். தமிழக பாஜக தலைவராக இருந்த அவர் பரபரப்பான ஆளுநராக தற்போது செயலாற்றி வருகிறார்.
பாஜக ஆளாத மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் நெருடலான உறவே நீடித்து வருகிறது. இதற்கு தமிழகம் உள்பட எந்த மாநிலமும் விதிவிலக்கு இல்லை. அந்த வகையில் தெலுங்கானாவிலும் தமிழிசை சௌந்தரராஜன் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
தெலுங்கானா ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழிசையின் முன்னாள் ஏடிசி துஷார் என்பவருக்கு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் போச் கேட் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளது.
இதனை கடுமையாக சாடியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். "தீபாவளி அன்று எனக்கு வாழ்த்து தெரிவிக்க துஷார் அழைத்திருந்தார். அதற்கு பின்னரே டி.ஆர்.ஏஸ் கட்சி இது போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. இதனால் எனது கைப்பேசி ஒட்டுக்கேட்கப்படுகிறதா என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
இது பிரைவசி சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநர் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு அனுமதி தராதது என பல குற்றச்சாட்டுகள் ஆளுநர் தமிழிசை மீது வைக்கப்பட்டுள்ளது.
இது மாதிரியான குற்றச்சாட்டுகள், முரண்பாடுகள், புகார்கள் 2019ம் ஆண்டு தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக பதவியேற்றது முதலிருந்து தொடர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust