இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கான்வாயில் அதி உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மெர்சிடீஸ் மேபேக் எஸ் 650 கார் சேர்க்கப்பட்டுள்ளது.
சரி, இந்த வாகனத்தின் சிறப்பு அம்சங்கள் என்னவென்று இங்கே பார்ப்போம்.
இந்த கார் பாகங்கள் மற்றும் அதன் ஜன்னல் கண்ணாடி, குண்டு துளைக்காத, வெடி விபத்தில் சேதப்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மோடி மற்றும் புடின்
இந்த காரின் விலை 12 கோடி. இது மணிக்கு 160கிமீட்டர் வேகத்தில் பயணிக்கும். இந்த கார் 6 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சின் கொண்டது. 516 பிஹெச்பி ஆற்றல் கொண்டது. விஆர் 10 அளவிலான பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டது.
மோடியின் புதிய வாகனம்
மோடி
காரின் உள்ளே ஒரு தொலைத்தொடர்பு வசதியும் உள்ளது. இது மிகவும் பாதுகாப்பானது. இந்த காரில் சீட் மசாஜர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் டாங்கில் ஏதேனும் ஓட்டை வந்தாலும் அது தானாகவே மூடிக்கொள்ளும் சிறப்பு பாதுகாப்பு கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. இந்த கோட்டிங்தான் ஏஹெச்64 அப்பாச்சி தாக்குதல் ரக ஹெலிகாப்டர்களின் பயன்படுத்தப்படும்.
Mercedas
பொதுவாக இம்மாதிரியாக புதிய கார்களை வாங்கும் பணியை எஸ்பிஜி என்கிற சிறப்பு பாதுகாப்பு படையே கவனித்துக் கொள்ளும். தாங்கள் பாதுகாப்பு வழங்கும் தலைவர்களுக்கு புதிய கார் தேவையா, என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் அதில் இருக்க வேண்டும் என்பதை இந்த படையே முடிவு செய்யும். புதிய காருக்கான கோரிக்கையையும் எஸ்பிஜி-யே முன் வைக்கும்.
Modi