ஒடிசா: கேமரா, மைக்ரோசிப், இறகில் ரகசிய செய்தி - உளவு பார்க்க வந்ததா புறா?  Twitter
இந்தியா

ஒடிசா: கேமரா, மைக்ரோசிப், இறகில் ரகசிய செய்தி - உளவு பார்க்க வந்ததா புறா?

அதன் கால்களில் இருந்த மைக்ரோசிப் மற்றும் கேமராவை தவிர, இறகுகளில் ஏதோ எழுதியிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Keerthanaa R

கால்களில் கேமரா மற்றும் மைக்ரோசிப் போன்ற சாதனங்கள் பொறுத்தப்பட்ட புறா ஒன்றினை கடற்படை காவலர்களிடம் ஒப்படைத்திருக்கின்றனர் ஒடிசா மாநில மீனவர்கள் சிலர்.

ஒடிசாவின் பாராதீப் துறைமுகத்தில் மீனவர்கள் சிலர் இந்த புறாவை கண்டெடுத்தனர். கொனர்க் பகுதியிலிருந்து 35 கிமீ தொலைவில் மீனவர்கள் படகு நிறுத்தப்பட்டிருந்தது.

அதன் கால்களில் இருந்த மைக்ரோசிப் மற்றும் கேமராவை தவிர, இறகுகளில் ஏதோ எழுதியிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மீனவர்கள் தங்களது மீன்பிடி படகான ’சாரதி’-யின் மேல் இந்த புறா அமர்ந்திருந்ததாக தெரிவித்தனர். ஜகத்சிங்பூர் காவல்துறையிடம் இந்த புறா ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தடவியல் நிபுணர்கள் அதன் மீது பொருத்தப்பட்டிருந்த சாதனங்களை ஆய்வு செய்யவுள்ளனர்.

இந்த புறாவை கால்நடை மருத்துவர்கள் சோதிக்கவுள்ளனர் என ஜகத்சிங்பூர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் பிஆர், டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்திடம் தெரிவித்திருக்கிறார்

கடல்வழி உளவு பார்க்க இந்த புற அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. புறா மீது இணைக்கப்பட்டிருந்த சாதனங்கள் ஒரு புறம் சோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையில், அதன் இறகுகளில் எழுதியிருந்தது என்ன என்பதை மொழிபெயர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?