ஜம்மு காஷ்மீர்: "சட்டமன்றத்தில் சினிமா ஷூட்டிங்" - முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வேதனை Twitter
இந்தியா

ஜம்மு காஷ்மீர்: "சட்டமன்றத்தில் சினிமா ஷூட்டிங்" - முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வேதனை

Antony Ajay R

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் 2018ம் ஆண்டு ஆளுநரால் கலைக்கப்பட்டது. ஆர்டிகள் 370 ரத்தானதால் ஏற்பட்ட களோபரங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. வரும் அக்டோபர் மாதத்திற்குள் அங்கு முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

சட்டமன்றம் செயல்படாததால் மூடிக்கிடக்கும் கட்டடத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளது ஆளுநர் தலைமையிலான அரசு. இது தனக்கு அளிக்கும் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா.

“ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற கட்டடத்தில் ஹுமா குரேஷி நடித்துள்ள ‘மகாராணி' என்ற டிவி தொடரின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடி, முக்கிய சட்டங்களை இயற்றிய இடத்தை தற்போது நடிகர்கள் நாடகங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.

6 ஆண்டுகளாக நான் முதலமைச்சராக அமர்ந்திருந்த இடத்தில் தற்போது ஒரு போலி முதலமைச்சர் இருக்கிறார். அவமானம்..!”

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?