India economy  Twitter
இந்தியா

உலகின் 3வது பணக்கார நாடாகும் இந்தியா - என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டு காலத்துக்குள் இணையம் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 650 மில்லியனில் இருந்து 960 மில்லியனாகவும், இணையத்தில் பொருட்கள் & சேவைகளை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை 250 மில்லியனில் இருந்து 700 மில்லியனாக அதிகரிக்கலாம்

Gautham

இந்திய பொருளாதாரம் 1990களில் உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்தியது. அதன்பிறகுதான் இந்தியாவில் இதுநாள் வரை பார்த்திராத பொருளாதாரப் பாய்ச்சல்களைப் பார்க்க முடிந்தது. கல்வி, தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி தொடங்கி மளிகைப் பொருட்கள் வரை எல்லாவற்றிலும் இந்தியா முன்னேறியது என்றால் அது மிகை இல்லை.

அப்படி வளர்ந்து வந்த இந்தியா, அடுத்த 10 ஆண்டுக் காலத்துக்குள் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும், உலகின் பிரமாண்டமான பங்குச் சந்தைகளில் ஒன்றாகவும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் உருவாகப் போவதாக உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான மார்கன் ஸ்டான்லி தன் 'Why this is India's decade' என்கிற அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.

Stock Market

ஒட்டுமொத்த உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஐந்தில் ஒரு பங்கு, இந்தியாவின் பங்களிப்பாக இருக்கும், அதற்கு இந்தியப் பொருளாதாரம் விரிவடைந்து வருவது மற்றும் அந்த நாட்டின் பறந்து விரிந்த நிலப்பரப்பு, மக்கள் தொகை போன்ற விஷயங்கள் முக்கிய காரணங்களாக அமையும் என மார்கன் ஸ்டான்லி குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் ஜி டி பி 3.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 8.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் ஜி டி பி 400 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரிக்கும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

இப்படி அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் 400 பில்லியன் டாலரைக் கடந்து பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.

share market

அதோடு இந்தியப் பங்குச் சந்தைகளின் சந்தை மதிப்பு 3.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2032ஆம் ஆண்டு 11 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைத் தொடும், அப்போது உலகிலேயே இந்தியப் பங்குச் சந்தைகள் 3ஆவது பெரிய சந்தையாக இருக்கும் என்கிறது.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான எல்லா விஷயங்களும் அதன் இடங்களில் இருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இப்படி ஏற்படும் மாற்றம் ஒரு தலைமுறையில் ஒரு முறை மட்டுமே ஏற்படும் மாற்றம், இது முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க 4 முக்கிய காரணங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

பரந்துபட்ட மக்கள் தொகை, டிஜிட்டல் மயமாவது, கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான திட்டங்களை முன்னெடுப்பது, உலகமயத்தின் தாக்கத்தைக் குறைப்பது ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது மார்கன் ஸ்டான்லி.

மேலும், நுகர்வின் பக்கம் திரும்பினால், தற்போது இந்தியாவில் ஆண்டுக்கு 35,000 அமெரிக்க டாலர் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஐந்து மடங்கு அதிகரிக்கும். அப்போது discretionary consumption என்றிழைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களைத் தாண்டி நுகரப்படும் பொருட்கள் & சேவைகள் அதிகரிக்கும், இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்கிறது மார்கன் ஸ்டான்லி அறிக்கை.

மற்றொரு பக்கம் இந்தியாவின் தனி நபர் வருமானம் (Per Capita Income) 2,278 அமெரிக்க டாலரிலிருந்து 5,242 அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

உலக ஏற்றுமதி வணிகத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 4.5 சதவீதமாக அதிகரிக்கலாம், இந்தியாவுக்கு 1.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

இந்தியாவின் சேவைத் துறை ஏற்றுமதி கடந்த 2021ஆம் ஆண்டில் 178 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, அடுத்த 10 ஆண்டு காலத்துக்குள் 527 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கலாம்.

2031ஆம் ஆண்டுக்குள் இ - காமர்ஸ் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தற்போது இருக்கும் 6.5 சதவீதத்தில் இருந்து 12.3 சதவீதமாக அதிகரிக்கலாம்.

stock market

அதே போல, இந்தியாவில் அடுத்த 10 ஆண்டு காலத்துக்குள் இணையம் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 650 மில்லியனில் இருந்து 960 மில்லியனாகவும், இணையத்தில் பொருட்கள் & சேவைகளை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை 250 மில்லியனில் இருந்து 700 மில்லியனாக அதிகரிக்கலாம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

2021 - 2030 வரையான காலத்தில் உலகத்தில் நடக்கவிருக்கும் கூடுதல் கார் விற்பனையில் (Incremental Car Sale) 25 சதவீதத்தை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 5.1 மில்லியனில் இருந்து 2031ஆம் ஆண்டில் 12.2 மில்லியனாக அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முறையான சுகாதார சேவைகளை தற்போது இந்தியாவில் உள்ள 30 - 40 சதவீதம் பேர் மட்டுமே பெறுகிறார்கள். அடுத்த தசாப்த காலத்துக்குள் இந்த எண்ணிக்கை 60 - 70 சதவீதமாக அதிகரிக்கலாம். இது எண்ணிக்கையில் பார்த்தால் 40 கோடி பேர் புதிதாக மருத்துவ உலகில் நுழைவர் என்கிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய எரிசக்தி & மின்சாரத் துறையில் சுமார் 700 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படலாம் என்றும் அவ்வறிக்கை சொல்கிறது.

இவை அனைத்தும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வியாபாரங்களுக்குச் சாதகமான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே கள எதார்த்தத்தில் சத்தியமாகும் என்பதையும் ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாகக் குறிப்பிட்டு இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?