பா. ரஞ்சித் முதல் ரித்திகா சிங் வரை: மல்யுத்த வீராங்கனைகளுக்காக குரல் கொடுத்த பிரபலங்கள் Twitter
இந்தியா

பா. ரஞ்சித் முதல் ரித்திகா சிங் வரை: மல்யுத்த வீராங்கனைகளுக்காக குரல் கொடுத்த பிரபலங்கள்

பலரும் மல்யுத்த வீராங்கனைகளுக்காக குரல் கொடுத்து வரும் இதே வேளையில் திரையுலகினர் சிலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Priyadharshini R

பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருக்கிறார். இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார்களை முன்னிட்டு இவரைக் கைது செய்யக்கோரி கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவை ஒட்டி நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயன்றனர்.

அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். வினேஷ் போகட், சாக்‌ஷி மாலிக் மற்றும் சங்கீதா போகட் ஆகியோர் இரவில் விடுவிக்கப்பட்டனர். இதற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு, அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பலரும் மல்யுத்த வீராங்கனைகளுக்காக குரல் கொடுத்து வரும் இதே வேளையில் திரையுலகினர் சிலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் டொவினோ தாமஸ்

“சர்வதேச விளையாட்டு அரங்கில் நமது மதிப்பை உயர்த்தியவர்கள் அவர்கள். முழு தேசத்துக்கும் நம்பிக்கைக்கு வெற்றியின் வண்ணங்களை அளித்தவர்கள்.

அவர்களின் சாதனைகளையும் பாராட்டுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தாலும், இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அந்த நீதி பறிக்கப்பட்டுவிடக் கூடாது. எதிர் பக்கம் நிற்பவர்கள் பலசாலிகள் என்பதற்காக அவர்கள் தோற்கடிக்கப்பட்டுவிடக் கூடாது. அவர்களின் கோரிக்கைகளை கேட்டு பரிசீலிக்க வேண்டும். நீதி தாமதிக்கப்படக் கூடாது, மறுக்கப்படக்கூடாது! ஜெய் ஹிந்த்.”

ரித்திகா சிங்

“அவர்களின் உணர்வுகளை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்த உலகத்தின் முன்பும் அவர்களின் கண்ணியமும், மரியாதையும் மறுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற முறையில் அவர்கள் நடத்தப்பட்டுள்ளனர்.

உலக அரங்கில் நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய அவர்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். இந்தியாவுக்கு பின்னால் அவர்கள் இருப்பதை போல, நாமும் அவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும். விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.”

பா.ரஞ்சித்

"மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு குரல் கொடுத்து, எம்பி பதவியில் இருந்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கை உடனடியாக நீக்கவும், அவருக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவும் நான் கோரிக்கை விடுக்கிறேன்

உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை நெஞ்சில் ஏந்திய சாம்பியன்கள் எந்தவிதமான கண்ணியமும் மரியாதையும் இன்றி நடத்தப்பட்டுள்ளனர். சாம்பியன்கள் தங்கள் பதக்கங்களை ஆற்றில் வீசப் போகும் முடிவுக்கோ அல்லது அவர்களது போராட்டத்துக்கோ அரசு பதிலளிக்காமல் மௌனம் காப்பது வெட்கக்கேடானது."

கமல்ஹாசன்

“மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்டது. அவர்களை நாட்டுக்கு பெருமை சேர்ப்பதற்காக போராட வைக்க வேண்டிய நாம், அவர்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக போராட வைத்து விட்டோம்.

நான் எனது சாம்பியன்களுக்கு துணை நிற்கிறேன்”

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?