Indigo airlines Twitter
இந்தியா

இண்டிகோ விமானம் : நடுவானில் பயணியின் செல்போன் தீப்பற்றியதால் பரபரப்பு

Priyadharshini R

அசாம் மாநிலம் திப்ருகர் விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி இண்டிகோ விமானம் வானில் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் செல்போன் திடீரென தீப்பிடித்தது.

உடனடியாக விமான ஊழியர்கள் தீ மற்ற இடங்களுக்கு பரவ விடாமல் துரிதமாக செயல்பட்டு, தீயை அணைத்தனர். மேலும் பயணிகளுக்கு எந்த ஒரு காயங்களும் இல்லாமல் இண்டிகோ விமானம் பத்திரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது.

Indigo airlines

விமானத்தில் ஏறியவுடன் செல்போனை துண்டிக்க விமானத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கும், ஆனால் அந்த பயணி செல்போனை பயன்படுத்தி வந்தாரா என்பது குறித்துத் தெரியவில்லை. செல்போன் தீப்பற்ற என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து IndiGo நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திப்ருகரில் இருந்து டெல்லிக்கு 6E 2037 என்ற விமானத்தில் சொல்போனிலிருந்து தீப்பொறி வெளியேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமான ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டதால், பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?