கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நடிகர் பிரகாஷ்ராஜ். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தியத்துடன், அவர் நின்ற இடத்தை பசு மாட்டின் கோமியத்தை வைத்து சுத்தம் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முற்போக்கு சங்கங்கள் இணைந்து சினிமா, சமுதாயம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டார். கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த தனியார் அமைப்புகளுக்கு அனுமதி கொடுத்ததால் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரிக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
மேலும் பிரகாஷ்ராஜிடம் இருந்து கற்று கொள்ள எதுவும் இல்லை எனக் கூறி பாஜக மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோஷங்களை எழுப்பினர். நடிகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கல்லூரிக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போராட்டத்தை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு தொடங்கியுள்ள ஐந்து திட்டங்களை ஆதரித்து பேசினார். காங்கிரஸால் தொடங்கப்பட்ட திட்டங்கள் கர்நாடக மக்களுக்கு பயனளிக்கின்றன என்றார்.
பிரதமர் மோடியின் திட்டங்கள் நாடு முழுவதும் தோல்வியடைந்துவிட்டன, அதைப் பற்றி யார் பேசுவார்கள் என்றும் பிரகாஷ் ராஜ் கூறினார்.
ஏற்கனவே பாஜக அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்திய நிலையில் இவ்வாறு நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியது இன்னும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரகாஷ்ராஜ் வெளியே சென்ற பின்னர், கருத்தரங்கு நடந்த அரங்கை பாஜக மாணவர் அமைப்பினர் சிலர், பசு மாட்டின் கோமியத்தைக் கொண்டு சுத்தம் செய்தனர். பாஜக மாணவர் அமைப்பினர் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust