Prakash Raj and Modi

 

Twitter

இந்தியா

பிரதமர் 2 மணி நேரம் தான் தூங்குகிறாரா? Insomnia -வா இருக்கும் கலாய்த்த பிரகாஷ் ராஜ்

மேலும், “மோடி நாட்டு மக்களுக்காக இரவு பகலாகக் கடினமாக உழைக்கிறார். தூங்காமல் தொடர்ந்து வேலை செய்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது ஒரு நாளுக்கு 2 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார்” எனப் பேசினார் பாஜக தலைவர்.

Antony Ajay R


கடந்த ஞாயிறு அன்று மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் பொது மேடையில் உரையாற்றினார். 2024ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கட்சியினர் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் என்று பேசினார்.

“ நாடாளுமன்றத்தில் நாம் பல திட்டங்களைச் செய்து முடிப்பதற்கு மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மை கட்டாயம் தேவை. எனவே சட்டமன்ற தேர்தலில் எல்லோரும் கடுமையான உழைப்பை செலுத்த வேண்டும்” எனக் கூறிய சந்திரகாந்த், பிரிதிவிராஜ் சவுகான் மற்றும் சத்ரபதி சிவாஜி ஆட்சிக்குப் பின்னர் மோடியின் ஆட்சியில் தான் இந்துக்களின் கை ஓங்கியிருக்கிறது என்றார்.

மேலும், “மோடி நாட்டு மக்களுக்காக இரவு பகலாகக் கடினமாக உழைக்கிறார். தூங்காமல் தொடர்ந்து வேலை செய்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது ஒரு நாளுக்கு 2 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார்” எனப் பேசினார்.

அவரது இந்த பேச்சு இணையத்தில் நெட்டிசன்களால் நகைப்புக்கு உள்ளானது. இதற்குக் கருத்து தெரிவிக்கும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டார்.

“கொஞ்சமாவது காமன் சென்ஸுடன் இருங்கள்… தூங்க முடியாமல் இருப்பது இன்சோமனியா நோயாகும் அதற்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். அது குறித்து தற்பெருமை கொள்ளக் கூடாது. உங்கள் தலைவரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” - என பிரகாஷ் ராஜ் தன் ட்விட்டில் தெரிவித்தார்.

பிரகாஷ்ராஜின் இந்த ட்விட்டும் இணையத்தில் வைரலானது. பிரகாஷ் ராஜ் இதற்கு முன் பலமுறை இது போன்று பிரதமரை விமர்சித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?