பிரசாந்த் கிஷோர்  Twitter
இந்தியா

Morning News Today: பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சித் தொடங்க முடிவு?

பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில்," கடந்த 10 ஆண்டுகளாக, ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை வடிவமைப்பதற்குமான எனது பயணம் ஏற்றத்தாழ்வு மிகுந்ததாக இருந்தது என்றார்.

NewsSense Editorial Team

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்குத் தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்.

பீகாரைச் சேர்ந்த இவர், ‘ஐ-பேக்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல்களில் பல்வேறு வியூகங்களை அமைத்துக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில்," கடந்த 10 ஆண்டுகளாக, ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை வடிவமைப்பதற்குமான எனது பயணம் ஏற்றத்தாழ்வு மிகுந்ததாக இருந்தது.

பிரச்னைகள் மற்றும் நல்லாட்சிக்கான பாதையை நன்கு புரிந்து கொள்வதற்காக உண்மையான எஜமானர்களாகிய மக்களிடமே செல்லும் நேரம் வந்து விட்டது. அதைப் பீகாரில் இருந்து தொடங்குகிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலும் இணைந்து பணியாற்றினார். அந்த கட்சியில் தேசிய துணைத்தலைவர் பதவியை பெற்றிருந்த அவர், பின்னர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்ஜான் பண்டிகை

இன்று ரம்ஜான் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் இன்று கொண்டாடப்படுகிறது.பிற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். அதையொட்டி நோன்பிருக்கும் இஸ்லாம் மக்கள் இன்று ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

MK Stalin

தமிழகத்தின் கோரிக்கை ஏற்பு: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

இலங்கை மக்களுக்கு உதவவேண்டும் எனத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான அனுமதி கேட்டு மத்திய அரசுக்குத் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கோரிக்கையை நிறைவேற்றியதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார். "இதனால் இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு வளரும். இந்த நல்லெண்ணம் அனைத்து துறைகளிலும் வளரட்டும்" என்றார்.

கர்நாடகா : முதல்வர் பசவராஜ் பொம்மை உள்பட மொத்த மந்திரி சபையும் மாற்றமா?

கர்நாடக அமைச்சரவை மாற்றம் குறித்தும், பாஜக ஆலோசனைக் கூட்டம் இரண்டிலும் கலந்துகொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா கர்நாடகா சென்றுள்ளார். இந்நிலையில், இன்று கர்நாடக அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கலாம் என்கின்றனர். கர்நாடகாவில், 40 சதவிகித கமிஷன் புகார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு, மத பிரச்சினைகள் என ஆளும் பாஜக அரசின் செயல்பாடு விமர்சனத்துக்கு உரியதாக இருப்பதால், முதல்வர் உள்பட பலரின் பதவிகள் பறிபோகும் என்கின்றனர். இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா, "பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் ஆட்சி செய்கிறார். அவரை கட்சி மேலிடம் மாற்ற வாய்ப்பில்லை"என்றார்

ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா

ஜப்பானிய பிரதமர் வாடிகனில் போப் பிரான்ஸ் உடன் நாளை சந்திப்பு!

ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் தொடங்கிய இந்தப் பயணத்தில் இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது மற்றும் ஆற்றல் துறையில் சீனாவின் வளர்ச்சி ஆகியவற்றை முன்னிட்டு நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்காக கிஷிடா இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, வாடிகனில் நாளை போப் பிரான்ஸை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

Ringu Singh

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்:

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?