taj mahal Twitter
இந்தியா

தாஜ்மஹாலில் ஆண்டுதோறும் காணாமல் போகும் விலையுயர்ந்த கற்கள் : RTI-யில் அதிர்ச்சி தகவல்

Priyadharshini R

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால் ஆக்ரா நகரில் உள்ளது. முகலாய பேரரசர்களில் ஒருவரான ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜ் மறைவையடுத்து அவரின் நினைவாக தாஜ் மஹாலை கட்டினார்

அதனால் இது காதல் சின்னமாகவும் போற்றப்படுகிறது.

லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை இந்த தாஜ் மகாலை கண்டு களித்து செல்வார்கள் பலரின், பக்கெட் லிஸ்ட்டில் இது இருக்கும்.

இந்த தாஜ் மஹால், திபெத் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பளிங்கி கற்கள் கொண்டு வரப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கற்களில் வெள்ளை நிற கற்கள் அதிக விலை உயர்ந்தவை. இந்த கற்கள் சூரிய எதிரொளிப்பு தன்மை இருப்பதால், காலை, மாலை மற்றும் இரவு என 3 வேளைகளிலும் வெவ்வேறு நிறங்களில் இந்த தாஜ் மஹால் மிளிர்கிறது.

இதனால், காலையில் பிங்க் நிறத்திலும், மாலையில் பால் நிறத்திலும் இரவில் நிலா ஒளியில் தங்க நிறத்திலும் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு கிடைத்த பதிலில், தாஜ்மகாலின் பொலிவை கூட்டும் விலையுர்ந்த கற்கள் ஒவ்வோர் ஆண்டும் மறைந்து வருகின்றன என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

காணாமல் போக கூடிய கற்களுக்கு பதிலாக புதிய கற்களை பதித்து வரும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக கடந்த 7 ஆண்டுகளில் இதுவரை ரூ.2.5 கோடி அளவுக்கு நிதியை செலவிட்டு பல பகுதிகளில் கற்களை பதித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?