beauty contest (rep) canva
இந்தியா

"அழகிப் போட்டியில் வென்றால் வெளிநாட்டு மாப்பிள்ளை" சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்

Keerthanaa R

அழகிப் போட்டியில் வெற்றிப்பெறும் பெண்ணுக்கு கனடா வாழ் இந்தியரை மணக்கும் வாய்ப்பு என அறிவிக்கப்பட்டது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விளம்பதற்கு இணையவாசிகள் பல்வேறு எதிர்மறை கருத்துகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இருவரை கைது செய்துள்ளது பஞ்சாப் காவல் துறை.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா என்ற இடத்தில் அழகிப்போட்டிக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், "அழகிப்போட்டியில் வெற்றி பெறும் பெண் கனடாவை சேர்ந்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்" என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் இந்த அறிவிப்பில், குறிப்பிட்ட மதத்தை, சமூகத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளுமாறும் சில வரிகள் இடம்பெற்றிருந்தன.

'அழகான பெண்களை' இந்தப் போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்த ஒருங்கிணைப்பாளர்கள், நிகழ்ச்சி அங்குள்ள ஒரு ஹோட்டலில் அக்டோபர் 23 அன்று நடைபெறும் என்று கூறியிருந்தனர்.

பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக இந்த விளம்பரம் இருக்கிறது என்றும், தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வண்ணம் இவர்களது இந்த அறிவிப்பு அமைந்துள்ளது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த போஸ்டர்களை பார்த்த பொது மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் இருவரை கைது செய்துள்ளது பஞ்சாப் போலீஸ். மேலும் பெண்களை அநாகரிகமாக சித்தரித்தல் தடை சட்டம் 1986-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் பிடிஐ செய்தி தளத்திற்கு தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் பல்ஜீத் குமார் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். மேலும் சமூக பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையிடம் இது குறித்த அறிக்கையை விரைவில் தருமாறும் உத்தரவிட்டுள்ளார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?