ராகுல் காந்தி : "மன்னிப்பு கேட்கப்போவதில்லை, நான் சாவர்கர் அல்ல" - என்ன பேசியானார் ராகுல்? Twitter
இந்தியா

ராகுல் காந்தி : "மன்னிப்பு கேட்கப்போவதில்லை, என் பெயர் சாவர்கர் அல்ல" - என்ன பேசினார்?

"நாடாளுமன்றத்தில் எனது அடுத்த பேச்சு குறித்து பிரதமர் மோடி பயந்துவிட்டார். அதனால் தான் இந்த தகுதிநீக்கம்" - ராகுல் காந்தி

Antony Ajay R
இதற்கெல்லாம் நான் அஞ்சபோவதில்லை. என்னை இந்த செயல்களின் மூலம் முடக்க முடியாது. பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்

ராகுல் காந்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முழங்கிய வார்த்தைகள் இவை. 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'மோடியின் பெயர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை மோடி அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 

அதானி , பிரதமர் மோடி

உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனது பதவி தகுதி நீக்கம் தொடர்பாக ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர், “அதானி குறித்த எனது பேச்சுக்கு பிரதமர் பயப்படுகிறார், அதை நான் அவரது கண்களில் பார்த்திருக்கிறேன். அதனால்தான், முதலில் இந்த தகுதி நீக்கம்.” என்றார்.

அதானி ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்தது யார்
ராகுல் காந்தி கேள்வி

மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில், “ நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரை நீக்கப்பட்டது, பின்னர் மக்களவை சபாநாயகருக்கு விரிவான பதில் எழுதினேன். நான் வெளிநாட்டு சக்திகளிடம் உதவி கேட்டதாக சில அமைச்சர்கள்  என்னைப் பற்றி பொய் சொன்னார்கள். ஆனால் நான் அப்படி எதுவும் செய்யவில்லை. நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன், பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவை தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்.” என்றார். 

“அதானி விவகாரத்தில் தொடர்ந்து கேள்விகள் கேட்பேன், தகுதி நீக்கம் செய்தும், சிறையில் அடைத்தும் என்னை பயமுறுத்த முடியாது. நான் பின்வாங்க மாட்டேன்.” 

அதானி ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்தது யார் என்பது எனது முக்கிய கேள்வி.இந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருப்பேன். 

 எனக்கு உண்மையைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை. நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன், அது என் வேலை, நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அல்லது கைது செய்யப்பட்டாலும் அதைத் தொடர்ந்து செய்வேன். இந்த நாடு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது, அதனால்தான் இதைச் செய்கிறேன்.

 இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், அதற்கான உதாரணங்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. ”நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு?அவர்கள் என் குரலை அடக்கி, என்னை ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்தலாம் என்று நினைத்தால், அவர்களால் அதைச் செய்ய முடியாது.நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன், ஜனநாயகத்துக்காக தொடர்ந்து போராடுவேன்” என்றார்.

மேலும் ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக கோரியதற்கு "மன்னிப்பு கேட்கமாட்டேன், நான் சாவர்கர் அல்ல" என்றும் பேசியிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?