வசுந்தரா ராஜே  Twitter
இந்தியா

Rajasthan : அரச பரம்பரையை சேர்ந்த வசுந்தரா ராஜே - யார் இவர்?

பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மூத்த தலைவராக இருக்கும் இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக இரண்டு முறை பணியாற்றியிருகிறார்.இந்த முறை ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றால், வசுந்தரா ராஜேவே முதலமைச்சராக தேர்வாக இருப்பார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Priyadharshini R

4 மாநிலங்களில், நடந்து முடிந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தற்போது வெளியாகி வருகின்றது. அந்த வகையில் ராஜஸ்தானில் அரச பரம்பரையை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே முன்னிலையில் உள்ளார்.

வசுந்தரா ராஜே சிந்தியா என்றும் அழைக்கப்படும் வசுந்தரா ராஜே, மார்ச் 8, 1953 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.

வசுந்தரா ராஜே தனது அரசியல் வாழ்க்கையை 1984 இல் தொடங்கினார். கட்சி படிநிலைக்குள் படிப்படியாக உயர்ந்தார். 1985ல், அவர் ராஜஸ்தானில் BJP யின் இளைஞர் பிரிவின் VP (Vice President) ஆக நியமிக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கட்சியின் மாநில பிரிவின் VP ஆனார். அவர் 1997-98 இல் பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் இணைச் செயலாளராகவும், 2002-03 இல் கட்சியின் ராஜஸ்தான் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார்.

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் ஒரு இடத்தை வென்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்தினார்.

பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மூத்த தலைவராக இருக்கும் இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக இரண்டு முறை (2003-08 மற்றும் 2013-18) பணியாற்றியிருகிறார்.

ராஜஸ்தானின் அரச பரம்பரையை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே இன்றளவும் ஹதோதி பகுதியில் அசைக்கமுடியாத தலைவராக உள்ளார்.

மத்தியபிரதேசத்தின் குவாலியர் அரச குடும்பத்தை சேர்ந்த இவருக்கு கடந்த 1972 -ம் ஆண்டு ஹதோதி பகுதியில் அரசகுடும்பத்தை சேர்ந்த ரணா ஹேமந்த் சிங்குக்கும் திருமணம் நடைபெற்றது.

தற்போது வரை ஹதோதி பகுதியில் யாராலும் அசைக்க முடியாத ராணியாக உள்ளார் வசுந்தரா. இங்கு உள்ள 17 சட்டப்பேரவை தொகுதிகளும் வசுந்தரா ராஜேவின் கோட்டையாக கூறப்படுகிறது.

2003-ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியில் வசுந்தரா ராஜே தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், இந்த முறை ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றால், வசுந்தரா ராஜேவே முதலமைச்சராக தேர்வாக இருப்பார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?