ரவீந்தர் கௌசிக் : பாகிஸ்தான் இராணுவத்தில் மேஜரான இந்திய RAW ஏஜெண்ட் - சுவாரஸ்ய கதை! Twitter
இந்தியா

ரவீந்தர் கௌசிக் : பாகிஸ்தான் இராணுவத்தில் மேஜரான இந்திய RAW ஏஜெண்ட் - சுவாரஸ்ய கதை!

தனது பருவ வயதில் நடிப்பின் மீது அதீத விருப்பத்துடன் நாடகங்களில் பணியாற்றி வந்தார் கௌசிக். அவரை கண்டறிந்த ரா அமைப்பு அவருக்கு உருது கற்றுக்கொடுத்தது. பாகிஸ்தானின் நிலப்பரப்பு குறித்தும் கற்றுக்கொடுத்து அவருக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.

Antony Ajay R

இந்தியாவின் ரா உளவு அமைப்பைக் குறிப்பிட்டாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் பெயர் ரவீந்தர் கௌஷிக் தான்.

இவர் பாகிஸ்தானின் இராணுவத்திலேயே சேர்ந்திருந்து தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது.

தனது 23 வயதிலேயே ரவீந்தர் ரா-வில் இணைந்திருக்கிறார். அவரது சுவாரஸ்யமான கதையைத் தெரிந்துகொள்வோம்.

இந்தியாவுக்கு ரா ஏஜெண்டகளாக பணியாற்ற அதிக ஆட்கள் தேவைப்பட்டனர். ஆனால் இராணுவ வீரர்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பு உள்ளிட்ட கலைகளைக் கற்றுக்கொடுத்து ரா ஏஜெண்டாக மாற்றுவது மிகவும் கடினமானதாக இருந்தது.

இதனால் இந்திய இராணுவம் சிறந்த நடிகர்களைத் தேடி அவர்களை உளவு அதிகாரியாக பயிற்றுவித்தது.

தனது பருவ வயதில் நடிப்பின் மீது அதீத விருப்பத்துடன் நாடகங்களில் பணியாற்றி வந்தார் கௌசிக்.

அவரை கண்டறிந்த ரா அமைப்பு அவருக்கு உருது கற்றுக்கொடுத்தது. பாகிஸ்தானின் நிலப்பரப்பு குறித்தும் கற்றுக்கொடுத்து அவருக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.

அவர் இந்தியாவில் வாழந்ததற்கான அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டு, நபி அகமது ஷாகிர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கராச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் இணைந்து சட்டம் பயின்றார். பின்னர் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைந்து அதிகாரியானார்.

சில ஆண்டுகளில் மேஜர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அங்கேயே அமனத் என்ற பெண்ணை மணந்து ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகவுமானார்.

1979 முதல் 1983 வரை இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்குப் பெரும் உதவியாக இருந்த முக்கியமான தகவல்களை அவர் கொடுத்திருக்கிறார்.

அவரை இந்திய பாதுகாப்பு படையில் தி பிளாக் டைகர் அதாவது கருப்பு புலி அன அழைத்தனர்.

அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி இந்த பெயரை வழங்கினாராம்!

ரவீந்தரிடம் இருந்து தகவல்களைப் பெற ரா இனியத் மசிஹா என்பவரை அனுப்பியிருக்கிறது.

1983 செப்டம்பரில் அவர் பிடிப்பட்டதால் ரவீந்தரும் மாட்டிக்கொண்டார். 1985ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக கொடுக்கப்பட்டது.

கௌசிக் சியால்கோட்டில் உள்ள ஒரு விசாரணை மையத்தில் இரண்டு ஆண்டுகள் சித்திரவதை செய்யப்பட்டார், மேலும் 16 ஆண்டுகள் மியான்வாலி சிறையில் அடைக்கப்பட்டார்.

2001 நவம்பர் மாதம் நுரையீரல் காச நோய் மற்றும் இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் ரவீந்தர் கௌசிக்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?