இந்தியாவில் திடீரென ஏற்ற இறக்கங்களை காணும் வெங்காயத்தின் விலை - காரணம் என்ன? Twitter
இந்தியா

இந்தியாவில் திடீரென ஏற்ற இறக்கங்களை காணும் வெங்காயத்தின் விலை - காரணம் என்ன?

Priyadharshini R

ஒவ்வொரு ஆண்டும் வெங்காயத்தின் விலையில் பெரிய ஏற்ற இறக்கங்களை நாடு காண்கிறது. ஆண்டின் தொடக்க மாதங்களில், வெங்காயத்தின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தபோது விவசாயிகள் அவதிப்பட்டார்கள்.

அதே சமயம் வெங்காயத்தின் விலை, விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து சாமானியர்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளியது.

6 மாதங்களுக்கு முன்பு கிலோ 5-10 ரூபாயாக இருந்த வெங்காயத்தின் விலை தற்போது கிலோ 70, 80, 90 மற்றும் 100 ரூபாயாக உள்ளது. 150 கிலோ வரை விலை போகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த திடீர் ஏற்ற இறக்கத்திற்குப் பின்னால் உள்ள காரணத்தை இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

இதற்கு இரண்டு காரணங்கள் கூறுகின்றன. ஒன்று தேவை அதிகரிப்பு மற்றொன்று வரத்து பற்றாக்குறை. இரண்டாவதாக சொல்லப்பட்டது தான், கடந்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரிக்க காரணமாக உள்ளது.

நவம்பர் மாதத்தில் வெங்காயத்தின் விலை கிலோ 150 ரூபாயை எட்டும் என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் வெங்காயம் வருடத்திற்கு இரண்டு முறை அறுவடை செய்யப்படுகிறது. வெங்காயம் ரபி பருவத்தில் (நவம்பர்/டிசம்பர்) ஒரு முறையும், காரீஃப் பருவத்தில் (ஜூன்/ஜூலை மற்றும் செப்டம்பர்/அக்டோபர்) மீண்டும் அறுவடை செய்யப்படுகிறது. இந்தியா வெங்காய உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாகவும் உள்ளது.

ஆண்டு முழுவதும் வெங்காயம் விளைந்த பிறகும், ஒவ்வொரு ஆண்டும் வெங்காயத்தின் விலை ஏன் உயர்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.

சர்வதேச சந்தையில் வெங்காய விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில், 40 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதேசமயம், இதற்கு முன்பு வெங்காயத்திற்கு ஏற்றுமதி வரி இல்லை. வெங்காயம் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (எம்இபி) டன்னுக்கு ரூ.66,730 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

எந்த வெங்காய வியாபாரியும் இதை விட குறைவான விலைக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாது. ஸ்டாக்கில் வைக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் டன் வெங்காயத்தை உள்ளூர் சந்தையில் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை அரசு விற்பனை செய்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?