"சாக்ஷி மாலிக்கின் முடிவு வேதனை அளிக்கிறது" - நடிகை ரித்திகா சிங் சொல்வதென்ன? Twitter
இந்தியா

"சாக்ஷி மாலிக்கின் முடிவு வேதனை அளிக்கிறது" - நடிகை ரித்திகா சிங்கின் ஆதங்கம் என்ன?

Priyadharshini R

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.  முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷணின் உறவினரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பிரிஜ் பூஷண் சிங் மீது ஆறு மல்யுத்த வீராங்கனைகள் கடந்த மே மாதத்தில் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினா்.

இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், மல்யுத்த சம்மேளனத்தின் அடுத்த தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் ஒரு பெண்கூட இல்லை. பிரிஜ் பூஷனின் உறவினரை தான் தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகை ரித்திகா சிங் தனது எதிர்ப்பை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், வீராங்கனை சாக்ஷி மாலிக்கை இப்படி பார்க்கும்போது இதயம் உடைகிறது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை பெற்றுத் தந்த சாக்ஷி மாலிக் இவ்வளவு ஆண்டுகள் கடின உழைப்பினை, கனவுகளை நம்பிக்கைகளை கைவிட்டு 'நான் விலகுகிறேன்' என கூறுவது பேரழிவானது.

தற்போதும், போராட்டத்தின் போதும் சாக்ஷி மாலிக் எதிர்கொண்ட அவமரியாதை கொடுமையானது என பதிவிட்டுள்ளார். நடிகை ரித்திகா சிங் 'இறுதிச்சுற்று' திரைப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?