சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் நொறுக்குத் தீனி வகைகளில் பானிபூரிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. மாலை நேரங்களில் பசிக்காகவும் சரி, ருசிக்காகவும் சரி இதனை விரும்பி உண்பார்கள்.
பிரியாணி பிரியர்கள், சாக்லேட் லவ்வர்கள் வரிசையில் பானிபூரி லவ்வர்களும் இங்கு இடம் பெறுகின்றனர்.
அந்த பானிபூரி லவ்வர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை அளித்திருக்கும். நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் காலரா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதற்கான காரணம் பானிபூரியுடன் வழங்கப்படும் தண்ணீரில் உள்ள பாக்டீரியா எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 12 பேருக்கு அப்பகுதியில் காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், உணவகங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தது.
அப்போது, லிலித்பூர் மாநகராட்சி பகுதியில், பானிபூரியுடன் வழங்கப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து, லலித்பூர் மாநகராட்சியில் பானிபூரி விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு போன்ற காலரா அறிகுறி தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காலரா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாநகராட்சி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பானி பூரி விற்கத் தடை விதிக்கப்படுகிறது. பானி பூரி விற்பதால் காலரா பரவ வாய்ப்பு அதிகமென்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust