பத்திரைக்கையாளர் மணி  News Sense
இந்தியா

"இந்திய பொருளாதாரம் சுடுகாட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது": ஊடகவியலாளர் மணி பேட்டி

50 வருடங்களுக்கு முன் பீகாரிலிருந்த ஜாப் ரையட்ஸ் (Job Riots) தற்போது மீண்டும் உருவாகியுள்ளது. மோடி வேலை தருவேன் என உறுதியளித்ததை நிறைவேற்றியிருந்தால், இன்று இந்த நிலை இல்லை. இதற்கு பாஜகவை பதில் சொல்ல சொல்லுங்கள் என்றார்

Keerthanaa R

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி பாரத் ஜோடோ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை துவங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடக்கவுள்ளார் ராகுல் காந்தி. கிட்ட தட்ட 9 ஆண்டுகளாக ஆட்சியிலும், அதிகாரத்திலும் இல்லாத காங்கிரஸ் கட்சியினை மீட்டெடுக்கும் முயற்சியாகவே இந்த பயணம் பார்க்கப்பட்டாலும், இந்திய ஒற்றுமைக்கான பயணம் எனக் கூறி வருகிறது காங்கிரஸ்.

பாரத் ஜோடோ குறித்தும், தற்போது இந்தியாவில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்தும் மூத்த பத்திரிக்கையாளர் மணி NewsSense நேர்காணலில் பேசியிருந்தார்.  

பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் எப்படி இருக்கும்?

இதன் நோக்கம் காங்கிரஸ் தலைவர் ராகுல் முன்பே குறிப்பிட்டது போல பாரத ஒற்றுமையின் பயணம்.  இந்தியாவில் தற்போது நிலவிக்கொண்டிருக்கும் அசாதாரண வெறுப்பு அரசியல், சக மனிதனை பழிவாங்க துடிக்கும் இழிவான குணம், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் இத்தனை காலமாக காப்பாற்றிவந்த விழுமியங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளை மக்களிடம் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்த தான் என்றார்

"எதார்த்தத்தில், பாதயாத்திரை துவங்கும் கட்சி உண்மையில் பலவீனமாக இருக்கிறது என்று தான் அர்த்தம். மக்கள் ஒற்றுமை என்ற பெயரில் கட்சியை வலுப்படுத்துதல் யுக்தி இது." 

ஆனால், நேருவோ இந்திரா காந்தியோ யாத்திரை போகவேண்டிய சூழல் அமையவில்லை. காரணம் அவர்கள் ஆட்சியில் தான் இருந்தார்கள். 8 ஆண்டுகளாக ஆட்சியிலும் இல்லாமல், பதவியிலும் இல்லாமல், இதுவரை இல்லாத அளவு பலவீனமாக இருக்கும் காங்கிரஸை மீட்டெடுக்கும் முயற்சி இந்த யாத்திரை என்றார் மணி 

ஆனால் தேசியக் கொடியை ஏந்தியவாறு தானே இந்த யாத்திரை நடக்கிறது?

காங்கிரஸ் இதை இந்திய ஒற்றுமை என சொல்லியிருக்கும் பட்சத்தில் தேசியக் கொடியை ஏந்தி தான் யாத்திரை நடக்கும். உயர்ந்த நோக்கங்களுக்காக யாத்திரைகள் செல்லும்போது தேசியக் கொடியை ஏந்தி செல்வது தான் வழக்கம்.  ஆகையால், இதில் நாம் விவாதிக்க வேண்டியது சிவில் சமூகம் முன்வைக்கும் பிரச்னைகளை என குறிப்பிட்டார்

"அமித் ஷா ராகுல் காந்தி சட்டை குறித்து சொன்னது "பச்ச பொய்". அந்த காலத்தை போல, தெருவில் படுத்து உறங்க முடியாது. மேலும் இதற்கான செலவுகளை மேற்கொள்வது கட்சி." 

வலது சாரிகள் "இந்தியா ஒற்றுமையாக தான் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு சென்று பாதயாத்திரை நடத்துங்கள்" என்று சொல்கிறதே?

இந்த வாக்கியம் ஆணவத்தின் உச்சக்கட்டம் எனக் கூறிய மணி, இவர்களே (பாஜக) இந்தியாவை ஆண்டுக்கொண்டிருப்பர்கள் என்ற எண்ணம் உள்ள அராஜகவாதிகளின், மத வெறியர்களின் பேச்சு தான் இது என்றார்.

"இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது என்றால், பிராந்தியங்களுக்கு இடையே பிளவு இல்லை தான். ஆனால் மக்களின் மனதில் ஒரு துவேஷம் இருக்கிறதே. சக மனிதனை விரோதியாக பார்க்கும் கண்ணோட்டம் இன்று வளர்ந்திருக்கிறதே. அதை மறுக்கமுடியுமா?" எனவும் கேள்வி எழுப்பினார்

ஹிஜாப் பிரச்னை, தலித் மக்களுக்கும், பெண்களுக்கும் நடக்கும் அநியாயங்களை பார்க்கும்போது, பாஜக எந்த அளவுக்கு வெறுப்பு அரசியலை செய்கிறது என்று தெரிகிறது என சாடிய அவர், இதை கண்டுபிடிக்க கொலம்பஸ் அறிவு நமக்கு வேண்டாம். குறைந்த பட்ச அறிவு, கண், கொஞ்சம் மனசாட்சி இருந்தால் போதும் என்றார்.

மேலும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து பேசிய மணி, மோடி ஆட்சிக்கு வரும்போது ஒரு சிலிண்டரின் விலை 400 ரூபாயாக இருந்தது, தற்போது 1100ஆக உயர்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆண்டுதோறும் 2000 வேலைவாய்ப்புகள் உருவாக்குவதாக கூறிய மோடி, அதன் நடைமுறைப்படுத்தினாரா எனவும் கேள்வி எழுப்பினார்  

"வேலை இல்லா திண்டாட்டம் இந்தியாவிற்கு பெரும் பிரச்னை. தென் இந்தியாவுல பெருசா இல்லை என்றாலும், வட இந்தியாவில் பூதாகாரமாக வளர்ந்து நிற்கிறது" என்றார்

50 வருடங்களுக்கு முன் பீகாரிலிருந்த ஜாப் ரையட்ஸ் (Job Riots) தற்போது மீண்டும் உருவாகியுள்ளது. மோடி வேலை தருவேன் என உறுதியளித்ததை நிறைவேற்றியிருந்தால், இன்று இந்த நிலை இல்லை. இதற்கு பாஜகவை பதில் சொல்ல சொல்லுங்கள் என்றார்

Modi

பக்கோடா போடுவது கூட வேலைதானே என்ற ஆட்சியாளர்களின் கேள்வி? 

பொருளாதாரத்தை பற்றிய அறிவு உள்ளவர்கள் இந்த பேச்சை முன்வைக்கமாட்டார்கள். பக்கோடா போடுவது இழிவான வேலை இல்லை. நாம் கேட்பது ஆக்கப்பூர்வமான வேலைகள். நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வேலைகள். வேலை வாய்ப்பை உருவாக்க திராணியற்றவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் என்று கூறிய மணி பொருளாதார கொள்கைகள் நாட்டை சுடுகாட்டிற்கு அழைத்துசென்று கொண்டிருக்கிறது என்றார்

வேலைவாய்ப்பு பெருகுவதற்கு வாய்ப்பிருக்கிறதா? 

இதற்கு பதிலளித்த பத்திரிக்கையாளர், பாஜகவின் பொருளாதார கொள்கைகள் சமமான வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றும், இந்தியாவில் இரண்டு பெரிய கார்பிரேட்டுக்கு தாரை வார்க்கும் பொருளாதார கொள்கையாக இருக்கிறது என்றும் கூறினார். விவசாயிகள் வருமானத்தை மூன்று மடங்கு பெருக்குவேன் என்ற வாக்குறுதி என்ன ஆனது?" எனவும் கேள்வி எழுப்பினார். 

இந்த பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த யாத்திரை எனவும் குறிப்பிட்டார்.

முழு வீடியோவையும் பார்க்க...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?