சிங்கப்பூர் பிரதமர்

 

Twitter

இந்தியா

Lee Hsien Loong சர்ச்சை பேச்சு : "நேருவின் இந்தியாவில் கிரிமினல் MP -கள்"

Antony Ajay R

சிங்கப்பூர் பிரதமர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்திய முன்னாள் பிரதமர் நேரு குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக இந்தியாவின் முதல் பிரதமரான ஜவர்ஹலால் நேரு குறித்து எதிர்மறையான கருத்துக்கள் பரவி வருகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் “எதற்கெடுத்தாலும் நேருவைக் குறைகூறுவதா?” என பாஜக-வினரை கேள்விகேட்டார்.

நேரு குறித்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை விமர்சித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் பேசியதாவது:-

“உயர்ந்த கொள்கைகளாலும், அரிய மதிப்புகளின் அடிப்படையிலும்தான் பல நாடுகள் உருவாகின, உருவாக்கப்படன. ஆனால் உயர்ந்த தலைவர்கள் இருந்த நாடுகளில் காலப் போக்கில் அந்தத் தலைவர்களின் வழி நடப்பவர்கள் குறைந்து போய் விடுகிறார்கள். நாடுகளும் மாறிப் போய் விடுகின்றன.

நேரு

மிகுந்த கொள்கைப் பிடிப்பில் தான் எல்லாம் ஆரம்பிக்கிறது. நாட்டின் விடுதலைக்காக, தீரத்துடன் போராடி வெற்றி பெற்ற தலைவர்கள், அந்த சுதந்திரத்தையும், கலாச்சாரத்தையும் காக்க மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். தீயிலிருந்து புடம் போட்ட தங்கங்களாய் அவர்கள் உருவாகிறார்கள். டேவிட் பென் குரியன் போல, ஜவஹர்லால் நேரு போல, ஏன் சிங்கப்பூரிலேயே பல தலைவர்கள் நம்மிடம் உள்ளனர்.

நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இவர்கள் உழைக்கிறார்கள், பாடுபடுகிறார்கள். மக்களின் சிறந்த எதிர்காலத்தை இவர்கள் நிர்ணயிக்கிறார்கள். ஆனால் இந்த தலைவர்கள் காட்டிய வழியை, அவர்களுக்குப் பின்னால் வரும் தலைமுறையினர் மறந்து போய் விடுகிறார்கள் அல்லது அதைக் கடைப்பிடிக்கத் தவறுகிறார்கள்.

அரசியலின் தன்மை மாறி விட்டது. தலைவர்களை மதிப்பது குறைந்து விட்டது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எப்படியும் அரசியல் செய்யலாம் என்று நினைத்து விடுகிறார்கள். அரசியல்வாதிகளிடமிருந்து மக்கள் எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்வதில்லை. காரணம், இதுதான் கிடைக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். எனவே தரம் குறைந்து விடுகிறது. நம்பிக்கை அடிபட்டுப் போய் விடுகிறது. நாடும் வீழ்ச்சி அடைந்து விடுகிறது.

நாட்டை உருவாக்கியவர்கள் ஏற்படுத்தி வைத்த தரத்தை இப்போது பல நாடுகளில் நாம் காண முடிவதில்லை. ஜவஹர்லால் நேரு உருவாக்கிய நாட்டில் இன்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் பாதிப் பேருக்கு மேல் கிரிமினல் வழக்குகளை சுமந்து கொண்டுள்ளவர்களாக இருக்கிறார்கள். பாலியல் வன்புணர்வு, கொலை என கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். இவற்றில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறப்பட்டாலும் கூட இவர்கள் வழக்குகளுடன் இருக்கிறார்கள் என்றார் லீ லூங்.

மோடி

சிங்கப்பூர் பிரதமரின் இந்த பேச்சு குறித்த காணொளியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

இதுதொடர்பாக சிங்கப்பூர் தூதர் சிமான் வாங்-கை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை தனது அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரியப்படுத்தியது. சிங்கப்பூர் பிரதமரின் பேச்சு தேவையில்லாத ஒன்று என்று இந்தியா தெரிவித்துள்ளது. எனக் கூறப்படுகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?