யூடியூப் சேனல்களால் நிறைந்திருக்கும் ஒரு கிராமம். இங்கு எந்தப்பக்கம் திரும்பினாலும் கேமராக்கள், நடிகர்கள், வசனங்கள்... இந்த மாதிரியான ஒரு ஊர் ஃப்ரான்ஸிலோ அல்லது அமெரிக்காவிலோ இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா? இல்லை, இந்தியாவிலேயே இப்படி ஒரு கிராமம் இருக்கிறது.
3000 பேருக்கு மேல் வசிக்கும் அந்த கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் இருக்கிறது. அவர்கள் வாங்கிய பழைய சம்பளத்தை விட யூடியூபின் வழியாக அதிக பணமும் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர் இந்த மக்கள்!
சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூர் பகுதியில் உள்ள துல்சி கிராமம் தான் அது. அங்குள்ள மக்கள் வீடியோ செய்து யூடியூபில் பதிவிட்டு, பார்வையாளர்களை ஈர்க்கும் கலையை கற்றறிந்து வைத்திருக்கின்றனர். இதனால் பணமும் சம்பாதிப்பதனால் பலர் தங்களது வேலைகளை விட்டுவிட்டு யூடியூபில் இறங்கியுள்ளனர்.
பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் கல்வி மற்றும் பிற தகவல்களை வழங்கும் சேனல்களும் அங்கு இருக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இரண்டு நண்பர்கள் தொடங்கிய இந்த பயணத்தில் இப்போது ஒரு ஊரே களமிறங்கியிருக்கிறது. அந்த பகுதியில் உள்ள அத்துனை பேரும் யூடியூபர்கள் தான்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் நெட்வர்க் இஞ்சினியராக பணியாற்றி வந்த ஞானேந்திர சுக்லா மற்றும் முதுகலை அறிவியல் பட்டதாரியான ஜெய் வர்மா ஆகியோர் இணைந்து தொடக்கி வைத்தது தான் இந்த பயணம்.
திரைப்பட பிரியராக இருந்த சுக்லா அலுவலகத்தில் கிடைத்த இணையவசதியைக் கொண்டு யூடியூப் வீடியோக்களைப் பார்த்துள்ளார். 2010 - 11 ஆண்டுகளில் அதிக யூடியூப் சேனக்ல்கள் எல்லாம் கிடையாது அந்த நேரத்தில் தான் வங்கி பணியை விட்டுவிட்டு யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளார் சுக்லா.
"எனக்கு காலையில சென்று மாலை வீடு சேரும் வேலையில் திருப்தி இல்லை. அதனால் நான் என் வேலையை விட்டுவிட்டு யூடியூப் சேனலைத் தொடங்கினேன். இப்போது வரை 250 வீடியோக்கள் செய்திருக்கிறோம். எங்கள் சேனலுக்கு 1.15 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்காங்க." என்று ஊடகங்களில் கூறியுள்ளார் சுக்லா.
மற்றொருவரான ஜெய் வர்மா, "நான் எம்.எஸ்.சி வேதியல் படித்திருக்கேன். ஒரு கோச்சிங் நிறுவனத்தில பார்ட் டைம் டீச்சரா வேலை செய்தப்போ 12 - 15 ஆயிரம் சம்பாதித்தேன். நாங்க யூடியூப் தொடங்கினதப் பாத்து மத்தவங்களும் தொடங்கினாங்க. அப்றம் டிக்டாக் பண்ணினோம் இப்போ ரீல்ஸ் பண்றோம். எனக்கு மாதம் 30-35 ஆயிரம் வருமானம் வருது." எனக் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் தங்களுக்கு மேடை (கேமரா) பயம் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். பொது இடங்களில் இருந்து நடிக்க வெட்கப்பட்ட காலத்தில் ஊரில் உள்ள பெரியவர்கள் ராம் லீலா நடகம் நடிக்க அழைத்ததாகவும் அப்போது பயம் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
இப்போது கிட்டத்தட்ட ஊரில் அனைவருமே நடிக்கத் தொடங்கிவிட்டனர். 3000 பேர் வசிக்கும் கிராமத்தில் 40% பேர் யூடியூப் சேனலில் சம்பாதிக்கின்றனர்.
யூடியூபின் வளர்ச்சி ஊரில் பெண்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் யூடியூபரான பின்கி, "நான் யூடியூப் சேனலைத் தொடங்கி ஒருவருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருந்த நிலையை யூடியூப் மாற்றியுள்ளது. எங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதை யூடியூப் வழியாக நிரூபித்து வருகிறோம்" எனக் கூறியிருக்கிறார்.
இப்போது அந்த கிராமத்திலிருக்கும் நிறைய பேர் இன்ஃப்ளூயன்சர்கள் தான்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust