Wedding Feast canva
இந்தியா

திருட்டுத்தனமாக திருமணத்தில் நுழைந்த இளைஞர்; அழையா விருந்தாளிக்கு அளித்த தண்டனை என்ன?

அப்படி அத்துமீறி திருமணத்திற்கு வந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து, அவருக்கு வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளனர், போபாலில் ஒரு குடும்பத்தினர்.

Keerthanaa R

திருமணத்திற்குள் அத்துமீறி நுழைந்து விருந்து சாப்பிட்ட இளைஞரை பிடித்து பாத்திரங்கள் கழுவ வைத்த சம்பவம் ஒன்று போபாலில் நிகழ்ந்துள்ளது.

அவர் பாத்திரம் கழுவும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வீட்டு திருமணங்களுக்கு சென்று திருட்டுத்தனாமாக நண்பர்களுடன் சாப்பிடும்படியான காட்சிகளை நாம் சினிமாக்களில் நிறைய பார்த்திருப்போம்.

ஒரு திரில்லுக்காக அதை செய்தாலும், யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவேண்டும். மாட்டிக்கொண்டால் கதை முடிந்தது.

Wedding

அப்படி அத்துமீறி திருமணத்திற்கு வந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து, அவருக்கு வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளனர், போபாலில் ஒரு குடும்பத்தினர்.

இளைஞர் ஒருவர் போபாலில், திருட்டுத்தனமாக ஒரு திருமணத்திற்கு சென்றுள்ளார்.

சாவகாசமாக அமர்ந்து திருமண விருந்தை ருசித்துள்ளார் அந்த இளைஞர். ஆனால் துரதிரஷ்டவசமாக அந்த இளைஞர் பிடிபட்டார்.

அவரை பிடித்த திருமண வீட்டார், பாத்திரங்களை கழுவச்சொல்லி தண்டனை விதித்துள்ளனர்.

மேலும் அந்த இளைஞர் பாத்திரம் கழுவுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

விசாரித்ததில், அந்த இளைஞர் ஜபல்பூரை சேர்ந்தவர் என்றும், MBA படித்து வரும் மாணவர் என்றும் தெரியவந்துள்ளது.

வீடியோவில் ஒருவர் மாணவரிடம், ”இலவசமாக சாப்பிட்டால் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா? உன் வீட்டில் செய்வது போல நினைத்து இங்குள்ள பாத்திரங்களை கழுவிவிட்டுச் செல்” என்று அதட்டுவது பதிவாகியுள்ளது.

அந்த மாணவரிடம் இந்த தண்டனை எப்படி இருக்கிறது என்று கேட்டபோது அவர் நகைச்சுவையாக, “இலவசமாக சாப்பிட்டதற்கு ஏதாவது திருப்பி கொடுக்க வேண்டாமா?” என்று கேட்டார்.

சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த வீடியோ கலவையான கருத்துகளை பெற்று வருகிறது. ஒரு சிலர், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் இதுபோல செய்வது ஒன்றும் புதிதல்ல. வீடியோ எடுத்து இதை தேவையில்லாமல் பிரச்னையாக மாற்றியிருக்கிறார்கள் என்றனர்.

ஒரு சிலரோ, இந்த மாதிரியான நாகரீகமற்ற பழக்கங்கள் எப்போது மாறும் என்றும், அந்த இளைஞரை விமர்சித்தும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?