Teacher Twitter
இந்தியா

கொட்டும் மழையில் ஆசிரியருக்கு பாதை அமைத்த மாணவர்கள் - சர்ச்சையை கிளப்பிய வீடியோ

Keerthanaa R

கொட்டும் மழையில் நனைந்தபடி பள்ளி மாணவர்கள் தங்களது ஆசிரியருக்கு நடந்து செல்ல பாதை அமைத்த காட்சி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தாய் தந்தையருக்கு பின் கல்வி கொடுக்கும் ஆசிரியருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம். ஆனால், பல சமயங்களில் ஏற்றுக்கொள்ளும்படியான கருத்தாக இவை இருப்பதில்லை. காரணம் அவர்கள் செய்யும் சில காரியம் தான். அப்படி ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேசம் மதுரா என்ற ஊரில் மழையினால் பள்ளி வளாகத்தில் வெள்ள நீர் தேங்க, அதில் இறங்கி நடக்க முடியாத நிலை உருவானது. இதனால், அந்த ஆசிரியர் தண்ணீர் தேங்கிய பகுதியை கடந்து செல்ல சிரமப்படுகிறார்.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர் தண்ணீரில் கால்படாமல் கடந்து செல்வதற்காக, வரிசையாக நாற்காலிகளைப் பாலம் போல அமைத்தனர். அந்த ஆசிரியர், ஒவ்வொரு நாற்காலியின் மீதும் ஏறி கடந்து செல்கிறார். தண்ணீரில் வைக்கப்பட்டிருக்கும் சேர்கள் கீழே விழாமல் இருக்க மாணவர்கள் அதை தாங்கிப்பிடித்துக் கொண்டனர்.

மாணவர்கள் மழையை சற்றும் பொருட்படுத்தாமல் ஆசிரியர் கடந்து செல்வதற்கு காத்திருக்கின்றனர்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட, பலரும் அந்த ஆசிரியரை வசைப்பாடி வருகின்றனர். "இது ம்யூசிகல் சேர் விளையாட்டல்ல.. மாணவர்கள் தங்களது ஆசிரியர் மழைநீர் தேங்கிய பாதையை கடக்க, நனைந்தபடி உதவும் காட்சி" என்று தலைப்பிட்டு பகிர்ந்திருந்தார் பாயல் மோஹிந்திரா என்ற பெண்.

இந்த வீடியோ வைரலாக, அந்த ஆசிரியரை இடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இதற்கு முன்னர் வகுப்பறையில் ஒரு ஆசிரியர் உறங்கிக்கொண்டிருக்கும்போது, மாணவி ஒருவர் அவருக்கு விசிறிய சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?