மகளின் திருமணத்திற்காக சேமித்த 18 லட்சம் ரூபாய் கரையான் அரித்து சேதம் - சோகத்தில் தாய்! canva
இந்தியா

மகளின் திருமணத்திற்காக சேமித்த 18 லட்சம் ரூபாய் கரையான் அரித்து சேதம் - சோகத்தில் தாய்!

நகைகள் மற்றும் சம்பாதித்திருந்த பணத்தை, மகளின் திருமணத்திற்காக லாக்கரில் வைத்திருக்கிறார். ரொக்கமாக 18 லட்சம் ரூபாயை லாக்கரில் வைத்திருந்த நிலையில், மொத்த பணமும் கரையானால் அரிக்கப்பட்டு அழிந்துப்போயுள்ளது.

Keerthanaa R

வங்கியில் சேமிப்பு பணமாக பத்திரப்படுத்தப்பட்டு இருந்த ரூ.18லட்சம், கரையான் அரிப்பில் அழிந்துபோயிருக்கிறது.

இத்தனை பணத்தையும் ஒரு பெண்மணி தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்தார்.

உத்திரபிரதேசத்தின் மொராடாபாத் என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அறிக்கைகளின் படி, அந்த பெண் கடந்த அக்டோபர் 2022ஆம் ஆண்டு இந்த பணத்தை பேங்க் லாக்கரில் வைத்திருக்கிறார்.

சிறுதொழில் முனைவோராகவும், டியூஷன் டீச்சராகவும் வேலைபார்த்து வருகிறார் பாதிக்கப்பட்ட பெண்.

நகைகள் மற்றும் சம்பாதித்திருந்த பணத்தை, மகளின் திருமணத்திற்காக லாக்கரில் வைத்திருக்கிறார். ரொக்கமாக 18 லட்சம் ரூபாயை லாக்கரில் வைத்திருந்த நிலையில், மொத்த பணமும் கரையானால் அரிக்கப்பட்டு அழிந்துப்போயுள்ளது.

சமீபத்தில் தனது வங்கி கணக்கிற்கு KYC செய்ய வங்கிக்கு சென்றபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

லாக்கரில் பணத்தை பத்திரப்படுத்தும்போது எடுக்கவேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அந்த பெண் மேற்கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. தனக்கு இது குறித்த எந்த விதமான விழிப்புணர்வும் இல்லை என அந்த பெண்ணும் கூறியுள்ளார்

இந்நிலையில், தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அந்த பெண் இழந்த தொகையை அவருக்கு வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் பணம் சேதமானால் அல்லது, உங்களது உடமைகளுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், Deposit Insurance Credit Guarantee Schemeன் மூலம் அரசு, பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்கும். அதே போல, ரிசர்வ் வங்கியின் வழி காட்டுதல்களின் படி, வங்கி லாக்கரில் நாம் வைக்கும் பொருட்களுக்கு வங்கிகள் பொறுப்பேற்காது, ஆனால் அவற்றின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்கும்.

அதே சமயத்தில் இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் காரணமாக நமது பொருட்கள் சேதமானால் அதற்கும் வங்கிகள் பொறுப்பல்ல. திருட்டு, தீ விபத்து போன்ற காரணங்களினால் சேதம் ஏற்பட்டால், வங்கிகள் பொறுப்பேற்று கொள்ளும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?