Terrorist attack Pexels
இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகளால் டிக்டாக் மாடல் சுட்டுக்கொலை - திட்டமிட்ட தாக்குதலா?

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 35-வயது பெண் டிக் டாக் மாடல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில், அவருடன் இருந்த 10 வயது சிறுவனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

Keerthanaa R

காஷ்மீரின் புட்கம் நகரில் லஷ்கர் ஈ தைபா (LeT) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அம்ரீன் பட் என்ற 35-வயது மாடல் அழகி ஒருவர் இறந்துள்ளார். இவர் டிக் டாக் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்.

Amreen Bhat

கடந்த புதன் கிழமை மாலை 7.55 மணியளவில், அம்ரீன் தனது வீட்டில் இருக்கும்போது இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இவருடன் வசித்த இவரது உறவினரின் மகன், ஃபர்ஹான் சுபைர், 10, காயங்கள் ஏற்பட்டுள்ளது. இருவரையும் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோதிலும், அம்ரீன் பிழைக்கவில்லை.


கடந்த 24 மணி நேரத்தில் இது இரண்டாவது தாக்குதல் என்றும், இது திட்டமிடப்பட்ட தாக்குதல் தான் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Amreen Bhat

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் ஸ்ரீநகரில் ஒரு காவல் துறை அதிகாரி, அவரது வீட்டின் முன் சுட்டுக்கொல்லப்பட்டார். தன் தந்தையைக் காப்பாற்ற சென்ற அவரது 7 வயது மகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?