ஆதித்யா ஐயர் instagram
இந்தியா

Chat GPT: இன்ஸ்டாவில் 10.8k ஃபாலோவர்ஸ் - இளசுகளின் மனம் கவர்ந்த ஆதித்யா ஐயர் - யார் இவர்?

நேரில் பார்க்காமலே கிரஷ் லிஸ்ட்டில் சேர்த்து ரசித்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் ஆதித்யா ஐயர்.

Keerthanaa R

சமீப நாட்களாக ஆதித்யா ஐயர் என்ற இளைஞர் தான் இளசுகளின் மனம் கவர் கள்வன். இவரது இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலை கண்டுபிடிப்பதும் முடியாத காரியமில்லை.

அப்படி அவரது பக்கத்திற்கு சென்று பார்த்தபோது, அவருக்கு இருந்த பின்தொடர்பவர்கள், 10.8K! அவற்றில் வெறும் 17 பேரைத்தான் இவர் பதிலுக்கு ஃபாலோ பேக் செய்கிறார்.

தனது நண்பர்களுடன் சில் செய்வதும், புத்தகம் வாசிப்பதும், சமையல் செய்வதும் என இவரது போஸ்ட்கள், இளம் பெண்களின் மனங்களை கொள்ளைக் கொள்வதாக தான் இருக்கின்றன.

உண்மையில் ஆதித்யா ஐயர் “அழுக்குச்சட்டை போட்டாலும் அழகாய் தோன்றும் ஆணழகன்” ஆக தான் இருக்கிறார்.

இவரது பதிவுகளுக்கு வரும் கமெண்ட்டுகளை வைத்து தான் சொல்கிறோம்!

நேரில் பார்க்காமலே கிரஷ் லிஸ்ட்டில் சேர்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் ஆதித்யா ஐயர். அவருக்கு திருமணமோ அல்லது காதல் ஏதேனும் செட் ஆகிவிட்டதா என்றால் அது தான் இல்லை.

உண்மையில் ஆதித்யா ஐயர் என்ற நபரே இல்லை...

ஆதித்யா ஐயர் என்பவர் ஒரு செயற்கை நுண்ணறிவு பாட். பாரத் மேட்ரிமோனி உருவாக்கிய மெய்நிகர் மனிதர்.

பாரத் மேட்ரிமோனி தங்களது நிறுவனத்தின் விளம்பரத்துக்காக இவரை டெவெலப் செய்துள்ளது. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் புகைப்படங்கள் ஏ ஐ மூலமாகவும், பதிவுகளுக்கு இடும் கேப்ஷன்கள் சாட் ஜிபிடி மூலமாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஏற்கனவே இதுபோல மெடா இன்ஃப்ளூயென்சராக கைரா என்ற ஏ ஐ பெண் இருப்பது குறிப்பிடத்தக்கது

எப்போது உருவாக்கப்பட்டது இந்த ப்ரொஃபைல்?

காதலர் தினத்தையொட்டி சில தினங்களுக்கு முன் உருவாக்கப்பட்டார் ஆதித்யா ஐயர். இவர், மனிதர்களை போலவே வேலண்ட்டைன் வாரமான ரோஸ் டே, சாக்லேட் டே என 7 நாட்களையும் கொண்டாடி, பதிவுகளை வெளியிட்டார். தான் தனக்கான காதலியை தேடிவருவதாகவும் ஒரு போஸ்ட்டில் குறிப்பிட்டிருந்தார்.

ஆதித்யா ஐயர் உண்மையில்லை:

பெரும் எதிர்பார்ப்புடன் இவரது ஃபாலோவர்கள் காத்திருந்தபோது தான் அந்த அதிர்ச்சிகர சேதி வந்தது. சரியாக பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இவர் உண்மையான மனிதர் அல்ல என்ற உண்மையை வெளியிட்டது நிறுவனம்.

ஆதித்யா ஐயர் உருவாக என்ன காரணம்?

உண்மையான காதலை தேடுபவர்கள், நிஜ மனிதர்களுடன் இணைவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவே இந்த கேம்பெயின் நடத்தப்பட்டதாக பார்த் மேட்ரிமோனி தெரிவித்தது.

மேலும், நாம் அனைவரும் ஒரு பெர்ஃபெக்டான இணை நமக்கு வேண்டும் என தேடி வருகிறோம். உண்மையில் நாம் யாருமே நூறு சதவிகிதம் பிழையற்றவர்கள் இல்லை. குறையில்லாத மனிதர்கள் இவ்வுலகில் இல்லை என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கவே ஆதித்யா ஐயர் என்ற பாட் உருவாக்கப்பட்டது எனவும் விளக்கமளித்திருந்தது.

சிறந்த, சந்தோஷமான திருமண வாழ்க்கை என்பது குறைகள் உள்ள இருவர், ஒருவருக்கொருவர் பெர்ஃபெக்டாக இருப்பது தான் எனக் கூறி, அப்படி ஒருவரை தேடி வருகிறீர்கள் என்றால் பாரத் மேட்ரிமோனியை அணுகுங்கள் எனவும் விளம்பரப்படுத்தியிருந்தது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?