ஹினா பார்ரே  Twitter
இந்தியா

20 வயதில் 25 லட்சம் வருமானம் : பண்ணை தொழிலில் பட்டைய கிளப்பும் கல்லூரி மாணவி

Priyadharshini R

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஹினா பார்ரே என்ற கல்லூரி மாணவி ( வயது 20) மீன் பண்ணை அமைத்து வருடத்திற்கு 25 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் வணிகம் படிக்கும் ஹினா பர்ரே, இளம் வயதிலிருந்தே மீன்பிடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார்.

இது குறித்து ஹினா கூறுகையில்,

”எனது தந்தையுடன் மீன் பிடிக்கச் செல்வேன். அப்போதுதான் எனக்கு மீன்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

நான் சொந்தமாக மீன் பண்ணை அமைக்க முடிவு செய்தேன். இந்த முயற்சியை மேற்கொள்வதற்கான அனைத்து உதவிகளையும் என் தந்தை செய்தார்.”

தனது குடும்பத்தினரிடமிருந்து தனக்கு முழு ஆதரவு கிடைத்ததால், புல்வாமாவில் உள்ள மீன்வளத் துறையை அணுகி, பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் மீன் பண்ணை உரிமத்திற்கு விண்ணப்பித்ததாக அவர் கூறினார்.

பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா என்பது மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட மீன் சார்ந்த தொழில்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி திட்டமாகும்.

கல்லூரி மாணவி டு இளம் தொழில்முனைவோர்

தனது பயணத்தைப் பற்றி விவரித்த ஹினா,

”மீன் பண்ணை அமைப்பதற்காக ஒரு நிலத்தை விற்றோம். ஆரம்பத்தில் வேலை செய்வது மற்றும் இந்த தொழில் குறித்து புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. ஆனால் படிப்படியாக நேரத்தை ஒதுக்கி கற்றுக்கொண்டேன்” என்றார்.

காஷ்மீர், டிரவுட் மீன்களுக்கு பெயர் பெற்றது. இந்த மீன் மலைப்பகுதிகளின் ஆறுகள் மற்றும் ஏரிகளில் மட்டுமே காணப்படுகிறது.

ஹினா தனது உற்பத்தியை அதிகரிக்க கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

மேலும் பண்ணையில் பயன்படுத்தும் தண்ணீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பண்ணைக்கே பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் பண்ணை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஆண்டுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான உற்பத்தியைப் பெற்றுள்ளோம் என்று தெரிவித்தார் ஹினா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?