தண்ணீருக்கு நடுவில் ஒற்றை தூணில் நிற்கும் சிவன் கோவில் - பின்னணி என்ன? twitter
இந்தியா

தண்ணீருக்கு நடுவில் ஒற்றை தூணில் நிற்கும் சிவன் கோவில் - பின்னணி என்ன?

இந்த கோவில் நடுவில் இருக்கும் குளம், எப்போதுமே வற்றாதாம். ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் என கூறப்படுகிறது. கோடைகாலங்களில் குளிராகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இதன் தண்ணீர் இருக்கும்.

Keerthanaa R

இந்தியா என்று எடுத்துக்கொண்டாலே கோவில்களுக்கு தனிச் சிறப்பு உண்டு.

இந்தியா முழுவதிலும், பல்வேறு கடவுளர்களுக்கு கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. இங்குள்ள பல கோவில்கள் மனித மூளைக்கு எட்டாத அதிசயங்களை உள்ளடக்கியது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கோவில், பேய்கள் கட்டிய கோவில், தண்ணீரில் மூழ்கும் கோவில் என இந்த பட்டியல் நீள்கிறது.

இந்தியாவில் பிரபலமான குகைக் கோவில்களும் உள்ளன. இங்கு பேசப்படவிருக்கும் குகைக் கோவிலானது, ஒரே ஒரு தூணின் வலிமையில் நிற்கிறது.

அது எப்படி சாத்தியம்? இந்த பதிவில் பார்க்கலாம்...

ஒரு கட்டிடத்தை சாதாரணமாக தாங்கிப் பிடிக்க 4 தூண்களின் பலம் தேவைப்படுகிறது. அதில் ஒன்று சேதமானாலும், கட்டிடம் சரிய வாய்ப்புகள் இருக்கிறது. அப்படியிருக்கையில், இந்தியாவில் அமைந்திருக்கும் கேதாரேஷ்வர் கோவில் ஒரே ஒரு தூணின் வலுவில் தாங்கி பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த குகைக் கோவில் மகாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ளது. ஹரிஷ் சந்திரகர் மலைகளில் அமைந்திருக்கும் இந்த குகைக்கோவிலுக்கு டிரெக்கிங் செய்து சென்றடையலாம். இந்த கோவிலின் பிரதான கடவுள் சிவன். தண்ணீருக்கு மத்தியில் நான்கு தூண்களுக்கு நடுவில் அமைந்திருக்கிறது கருவறை.

முதலில் நான்கு தூண்களுடனே கட்டப்பட்டது இந்த சிவன் கோவில். கதைகளின் படி, சத்ய யுகம், திரேதாயுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகத்தை குறிப்பதாக இந்த நான்கு தூண்கள் கட்டமைக்கப்பட்டது. ஒரு ஒரு யுகம் முடிவடையும்போதும் ஒரு தூண் தன்னால் இடிந்து விழுந்தது என கூறப்படுகிறது. இதனையே அங்கு சுற்றுப்புறத்திலுள்ள மக்களும் நம்புகின்றனர்.

தற்போது கலியுகம் நடைப்பெற்று வருகிறது. இதனால், இந்த யுகத்தை குறிக்கும் தூண் மட்டும் இடிந்துவிழாமல் நிற்கிறது. இந்த கலியுகம் முடிவடைந்தால், அந்த தூணும் இடிந்துவிழுந்துவிடும் என நம்பப்படுகிறது.

ஒரு வேளை அப்படி நடந்தால், இந்த கோவிலின் நிலை என்ன என்பதும் தெரியவில்லை.

இந்த குகைக்கோவில் பற்றிய மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் இருக்கிறது. இந்த கோவில் நடுவில் இருக்கும் குளம், எப்போதுமே வற்றாதாம். ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் . கோடைகாலங்களில் குளிராகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இதன் தண்ணீர் இருக்கும். முன்பே கூறியது போல, இதற்கு மத்தியில் தான் அந்த ஒற்றை தூணும், அதற்கு நடுவில் சிவலிங்கமும் இருக்கிறது.

இந்த சிவ லிங்கத்தை அடைய இடுப்பளவு இருக்கும் தண்ணீரில் நடந்து செல்லவேண்டும். இந்த கோவிலுக்கு மலையின் மீது டிரெக்கிங் செய்து செல்வது தான் ஒரே வழி. இதனால் பயணப்பிரியர்களின் ஃபேவரட் ஸ்பாட்டாகவும் உள்ளது இந்த இடம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?